ரயில் பயணச்சீட்டு விற்பனையை தனது இணைய தளம் மூலம் தொடங்க இருப்பதாக முன்னணி தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி அறிவித்துள்ளது.
இதற்காக ரயில்வேயின் துணை நிறுவனமான IRCTC-யுடன் ஒப்பந்தம் செய்திருப்பதாக அந்த வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
செல்போனில் வங்கிச் சேவைகளைப் பெறும் வாடிக்கையாளர்களும் ரயில் பயணச் சீட்டை வாங்கலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வசதியைப் பெறுவதற்கு IRCTC இணைய தளத்தில் ஒருமுறை தங்கள் விவரத்தைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது.