ஆன்லைன் சேர்க்கை தொடர்பாக யுஜிசி தலைவர் வேதபிரகாஷ் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
பல்கலைக்கழக நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை கடைப்பிடிக்க ஆன்லைன் சேர்க்கை முறைக்கு மாற வேண்டியது அவசியம். இந்தத் திட்டம் பெற்றோர், மாணவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
ஆன்லைன் சேர்க்கை முறைக்காக இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பல்கலைக்கழக நிர்வாகங்கள் யு.ஜி.சிக்கு தெரியப்படுத்த வேண்டும். அடுத்த கல்வியாண்டில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஆன்லைன் சேர்க்கை முறை அமல்படுத்தப்பட வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்