கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு பிஎஸ்என்எல் ப்ரீபெய்டுக்கு சலுகை

கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு பிஎஸ்என்எல் ப்ரீபெய்டுக்கு சலுகை

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரீசார்ஜ் செய்வதில் பல்வேறு சலுகைகளை பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.இது தொடர்பாக பிஎஸ்என்எல் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையையொட்டி பிஎஸ்என்எல் ப்ரீபெய்டு வாடிக்கை யாளர்களுக்கு பல்வேறு சேவைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்யும் போது, முழு அழைப்புக் கட்டணத்தையும் பெற முடியும்.டிசம்பர் 25, 26-ம் தேதியன்று ரூ.220-க்கு ரீசார்ஜ் செய்யும்போது, அதே தொகையை அழைப்புக் கட்டணமாக பெறலாம்.

அதே போல், ரூ.290க்கு ரீசார்ஜ் செய்தால் ரூ.320, ரூ.390-க்கு ரீசார்ஜ் செய்தால் ரூ.433 , ரூ.890-க்கு ரீசார்ஜ் செய்தால் ரூ.1000, ரூ.2 ஆயிரத்துக்கு ரீசார்ஜ் செய்தால் ரூ.2 ஆயிரத்து 300, ரூ.3 ஆயிரத்துக்கு ரீசார்ஜ் செய்தால் ரூ.3 ஆயிரத்து 450 , ரூ.5 ஆயிரத்துக்கு ரீசார்ஜ் செய் தால் ரூ.6 ஆயிரம் என்று செலுத்தும் தொகையைவிட கூடுதலாக அழைப்புக் கட்டணம் வழங்கப்படும். கூடுதல் அழைப்புக் கட்டண சலுகை ஜனவரி 2-ம் தேதி வரை உள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி