உஷாரா இருங்க! கணக்கில் இருந்து பணம் சுருட்டும் கும்பல் வங்கி வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை

திருப்பூர் : வங்கியில் இருந்து பேசுவதாகக்கூறி, ஏ.டி.எம்., கார்டு எண்ணை பெற்று, நூதன முறையில் மர்ம நபர்கள் பணம் சுருட்டுகின்றனர். வங்கி கணக்கு, குறியீட்டு எண், ஏ.டி.எம்., கார்டு எண் போன்றவற்றை, யாரிடமும் கூற வேண்டாம் என, வங்கி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மொபைல்போனுக்கு அடுத்ததாக, இப்போது எல்லோரிடமும் இருப்பது, ஏ.டி.எம்., கார்டு. இத்தகையவர்களை குறி வைத்து, சமீபத்தில் சில போன் அழைப்பு வருகிறது. எதிர்முறையில் பேசும் நபர், தன்னை வங்கி அதிகாரி என அறிமுகம் செய்து கொள்கிறார்; "உங்கள் ஏ.டி.எம்., கார்டு "லாக்' ஆகி விட்டது. கணக்கு நடவடிக்கையை தொடர வேண்டுமெனில், ஏ.டி.எம்., கார்டு பின்புறம் உள்ள, 14 இலக்க எண்ணை தெரிவியுங்கள்' என்கிறார்.

வாடிக்கையாளர், ஏ.டி.எம்., எண்ணை கூறியதும், "உங்களுக்கு விரைவில் எஸ்.எம்.எஸ்., வரும்' என கூறி விட்டு, இணைப்பை துண்டிக்கிறார். ஆனால், அவ்வாறு எஸ்.எம்.எஸ்., வருவதில்லை; மீண்டும் அதே எண்ணை தொடர்பு கொண்டால், "தொடர்பு எல்லையில் இல்லை' என்றே பதில் கிடைக்கிறது. ஓரிரு நாட்களில், ஏ.டி.எம்., எண்ணை பயன்படுத்தி, வாடிக்கையாளர் கணக்கில் உள்ள மொத்த பணமும், "ஆன்-லைன்' முறையில் சுருட்டப்படுகிறது. சமீபத்தில், திருப்பூரை சேர்ந்த ஒருவரின் வங்கி கணக்கில், இவ்வாறு பண மோசடி நடந்துள்ளது. பொருளாதார குற்றப்

பிரிவில், அவர் புகார் அளித்தார். விசாரணையில், வடமாநிலத்தில் இருந்து, அழைப்பு வந்தது தெரியவந்தது. எனினும், "யார் அழைத்தது; எங்கிருந்து பணம் எடுக்கப்பட்டது என்பதற்கான முகாந்திரம் தெரியவில்லை.இதுபோன்ற சம்பவங்களை தடுக்க, வாடிக்கையாளருக்கு எஸ்.எம்.எஸ்., வாயிலாக வங்கிகள் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றன. எனினும், பலர் அதை படிப்பதில்லை; அல்லது, படித்து பொருள் அறியாமல் அலட்சியமாக இருந்து விடுகின்றனர். இதுபோன்ற குற்றச்செயலகள் நடைபெறாமல் இருக்க, வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் நேரடியாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கணக்கு மற்றும் ஏ.டி.எம்., கார்டு குறித்தரகசிய குறியீட்டு எண்ணை, எந்த சூழலிலும் யாருக்கும் தெரியப்படுத்தக்கூடாது என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

உஷாரா இருக்கணும்வாடிக்கையாளர்களும், முன்பின் அறிமுகமில்லாத நபர்கள், போனில் பேசுவதை நம்பி, கணக்கு விவரங்கள், ஏ.டி.எம்., கார்டு எண், குறியீட்டு எண் விவரங்களை கூறக்கூடாது. யாரேனும், போனில் கேட்டால், அவர் குறித்த விவரம், எந்த வங்கி, என்ன நோக்கத்துக்காக கேட்கிறார் என, கேள்வி எழுப்ப வேண்டும்; தேவைப்படும் விவரங்களை, வங்கிக்கு நேரில் வந்து தருவதாக கூறி, அழைப்பை துண்டிக்க வேண்டும். இவ்விஷயத்தில், வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என, வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி