டிஜிட்டல் இந்தியாவிற்கு கூகுள் உதவி

புதுடில்லி : டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு தேவையான உதவிகளை கூகுள் செய்ய தயாராக இருப்பதாக கூகுள் நிறுவன சி.இ.ஓ. சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.

கூகுள் சி.இ.ஓ. சுந்தர்பிச்சை, டில்லியில், ஊடகத்துறையினர் மற்றும் மாணவர்களை சந்தித்துப்பேசினார்.

அங்கு அவர் பேசியதாவது, அடுத்த 3 ஆண்டுகளில், இந்தியாவில் உள்ள 300க்கும் மேற்பட்ட கிராமங்கள் இணையதளத்தின் மூலம் இணைக்கப்பட உள்ளன. இது தேசிய அளவில் செயல்படுத்தப்பட உள்ளது.

புராஜெக்ட் லூன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலம், கிராமப் பகுதிகளுக்குள் தொடர்பு ஏற்பட வழிவகை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவில் 2016ம் ஆண்டு இறுதிக்குள், 100 ரயில் நிலையங்களில் வை-பை வசதி செய்யப்பட உள்ளது. மும்பை சென்ட்ரல் ரயில் ஸ்டேசனில், வரும் ஜனவரி மாதத்தில் வை பை வசதி செய்யப்பட உள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி