மழையால் புத்தகங்களை இழந்த தனியார் பள்ளி மாணவர்கள் இணையத்தில் பதிவு செய்ய வசதி

தனியார் பள்ளி மாணவர்கள் புத்தகங்களை இழந்திருந்தால், இணையதளம் மூலம் பதிவுசெய்து வீட்டு முகவரியிலேயே புத்தகங்களை பெறலாம் என தமிழ்நாடு பாடநூல் கழகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 


''சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக பாடநூல்களை இழந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தேவையான பாடநூல்கள், சம்பந்தப்பட்ட துறைத்தலைவர்கள் மூலம் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.சுயநிதிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பாடநூல்களை இழந்திருந்தால் அவர்கள் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் www.textbookcorp.in என்ற இணையதளம் வழியாக பதிவுசெய்து,வீட்டு முகவரியிலேயே பாடநூல்களை பெற்றுக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.


இது தவிர தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தின் வட்டார அலுவலகங்களிலும் போதுமான புத்தகங்கள் விற்பனைக்கு உள்ளன. இது தவிர தனியார் பள்ளிகள் கூடுதல் பாடநூல்கள் கோரினால், ஏற்கெனவே உள்ள நடைமுறைப்படி இணையவழி சேவையை பயன்படுத்தி உடனுக்குடன் பெற்றுக்கொள்ளலாம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி