சபரிமலை: சபரிமலையை தேசிய வழிபாடு நகரமாக்கும் அறிவிப்பு, ஓரிரு நாளில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
சபரிமலை அமைந்துள்ள இடம், பெரியாறு புலிகள் சரணாலயத்துக்கு உட்பட்ட பகுதியில் வருகிறது. இங்கு, எந்த பணி நடத்த வேண்டுமென்றாலும், வனத்துறையின் அனுமதி பெற வேண்டும். பல திட்டங்களுக்கு வனத்துறை அனுமதி கொடுக்காமல் கிடப்பில் கிடக்கிறது. 'ஒரு மரம் வெட்டினால், 10 மரம் நட வேண்டும்' என்ற நிபந்தனை விதிக்கப்படுகிறது. நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில், சபரிமலையை தேசிய வழிபாட்டு மையமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.இது தொடர்பாக, கேரள அரசு, மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. முதல்வர் உம்மன் சாண்டியும், அமைச்சர்களும் டில்லியில், பிரதமர் மோடியை சந்தித்து, இந்த கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனர்.
கேரள பா.ஜ., தரப்பிலும் இந்த கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி இன்றும், நாளையும் கேரளாவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ள நிலையில், சபரிமலையை வழிபாட்டு நகரமாக அறிவிப்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதன் மூலம், சபரிமலைக்கு அதிக அளவில் மத்திய அரசு நிதி கிடைக்கும்; பக்தர்களுக்கு பல்வேறு வசதிகளை செய்ய முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.ஆனால், கோவில் நிர்வாகம், உரிமை, வருமானம் என, எதையும், எவருக்கும் விட்டுக்கொடுக்கக் கூடாது என, தேவசம் போர்டு ஊழியர்கள சங்கம் கூறியுள்ளது.
சபரிமலை வருமானத்தை வைத்து தான் தேவசம் போர்டின் கீழ் உள்ள, 1,248 கோவில்களில் விளக்கு ஏற்றப்படுகிறது. அதனால், சபரிமலை அதிகாரம், திருவிதாங்கூர் தேவசம் போர்டின் வசம் தான் இருக்க வேண்டும்.
- பைஜு, தேவசம் போர்டு ஊழியர் சங்க தலைவர்
பக்தர்கள் உதவி மையம்:
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பக்தர்கள் உதவி மையம், சபரிமலை சன்னிதானத்தில் திறக்கப்பட்டது. சன்னிதானத்தில் பெரிய நடைபந்தலில் உள்ள திருவிழா கட்டுப்பாடு அலுவலகத்தில் இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.தமிழக பக்தர்கள் மொழி ரீதியாக சிரமப்படும் போது, அவர்களுக்கு தேவையான தகவல்களை இங்கு பெற முடியும். குமரி மாவட்ட தேவசம் போர்டில் பணிபுரியும் அதிகாரிகள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.தமிழக பக்தர்கள் உதவி மைய அலைபேசி எண்கள்: 98942 52632, 99949 48299, 99940 45032