டிஜிட்டல்' மயமாகிறது ரயில்வே: பேப்பர் டிக்கெட் இனி இல்லை!

புதுடில்லி:இந்திய ரயில்வே, 'டிஜிட்டல்' மயமாகிறது. பேப்பர் டிக்கெட் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, எஸ்.எம்.எஸ்., மூலம் டிக்கெட் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது

இந்திய ரயில்வேயில், தற்போது தினமும், 11 லட்சம் டிக்கெட்டுகள் பயணி களுக்கு வழங்கப்படுகின்றன. இவற்றில், ஆறு லட்சம் டிக்கெட்டுகள், பேப்பராக வழங்கப்படுகின்றன.

மீதமுள்ள ஐந்து லட்சம் டிக்கெட்டுகள், எஸ்.எம்.எஸ்., ஆக, பயணிகளின் மொபைல் போனுக்கு அனுப்பப்படுகின்றன. ரயில்வே துறையை முழுவதுமாக, டிஜிட்டல் மயமாக்கும் வகையில், பேப்பர் டிக்கெட் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மிஷின்கள்இதுகுறித்து ரயில்வே அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:ரயில்வேயில், இ - டிக்கெட் முறையில் பெறப்படும் டிக்கெட்டுகளுக்கு மட்டுமே, தற்போது எஸ்.எம்.எஸ்., அனுப்பி வைக்கப்படுகிறது. ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ள கவுன்டர்களில் முன்பதிவு செய்பவர்களுக்கு, பேப்பர் டிக்கெட் வழங்கப்படுகிறது.

இனிமேல், ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ள டிக்கெட் கவுன்டர்களில் முன்பதிவு செய்பவர்களுக்கும், எஸ்.எம்.எஸ்., முறையில் டிக்கெட் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பேப்பர் டிக்கெட்டுக்கு பதிலாக, பயணிகளின் மொபைல் போன்களுக்கு, பயணம் செய்யும் ரயில், தேதி, நேரம், பெட்டி, இருக்கை எண் உள்ளிட்ட விவரங்கள், எஸ்.எம்.எஸ்., ஆக அனுப்பி வைக்கப்படும்.

நடைமேடை டிக்கெட்டுகளை பெறுவதற்காக, ரயில்வே ஸ்டேஷன்களில் மிஷின்கள் நிறுவப்படும். இந்த மிஷின்களில், பயணிகளின் மொபைல் போன் எண்ணை பதிவு செய்தால், நடைமேடை டிக்கெட்டுக்கான எஸ்.எம்.எஸ்., அனுப்பி வைக்கப்படும். பல ஆயிரம் டன்ரயில் பெட்டிகளில் முன்பதிவு செய்த பயணிகளின் பெயர் அடங்கிய பட்டியல், தற்போது ஒட்டப்படுகிறது. இந்த நடைமுறையும் ரத்து செய்யப்பட உள்ளது. இதன்மூலம், பல ஆயிரம் டன் பேப்பர் சேமிக்கப்படும். இவ்வாறு ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.போன் இல்லாவிட்டால்?'மொபைல் போன் இல்லாத பயணிகள், டிக்கெட் பெறுவது எப்படி' என்ற கேள்விக்கு, ரயில்வே வட்டாரங்கள் அளித்துள்ள பதில்:

தற்போது, பெரும்பாலான பயணிகளிடம் மொபைல் போன்கள் உள்ளன. மொபைல் போன் இல்லாத பயணிகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். பயணிகளிடம் மொபைல் போன் இல்லை என்பது உறுதியாக தெரியவந்தால், அவர்களுக்கு மட்டும், பேப்பர் டிக்கெட் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும். இவ்வாறு ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி