சென்னையில் எந்தெந்த சாலைகளில் வெள்ளம்? - நீங்களும் உதவலாம்!

சென்னையில் இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால், பெரும்பாலான சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் நெட்டிசன்கள் மேப் மூலம் வெள்ளம் சூழ்ந்துள்ள சாலைகளை அடையாளம் காணக்கூடிய வசதியைச் செய்துகொடுத்துள்ளார்கள். இதன் மூலம் கிடைக்கும் தகவல், பின்னாளில் நகரை சீரமைப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கும். எப்படி உதவுவது?

1. இந்த லிங்கை க்ளிக் செய்யுங்கள்! -> 

2. எந்த சாலை வெள்ளத்தில் இருப்பதாக மார்க் செய்ய விரும்புகிறீர்களோ, அதை ஸூம் செய்து, சாலையை க்ளிக் செய்யுங்கள். இப்போது சாலை மார்க் ஆகிவிடும். 
3. சென்னையில் வெள்ளம் பாதித்துள்ள சாலைகளை மற்றவர்கள் அடையாளம் காட்டியிருப்பதையும் பார்க்கலாம்.

ஆனால், வெள்ளம் பாதித்த பகுதிகளை மட்டுமே மார்க் செய்ய வேண்டும். முழுவதும் ஓபன் - சோர்ஸாக தரப்பட்டுள்ள இந்த வசதியை சரியாகக் கையாண்டால், பின்னாளில் சிறப்பான பலன்களை அளிக்கும்.
- ர. ராஜா ராமமூர்த்தி

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி