80 சதவீத கட்டண சலுகை:பி.எஸ்.என்.எல்., அறிவிப்பு

சிம் கார்டு இலவசமாக வழங்குவதுடன், 80 சதவீத கட்டண சலுகை வழங்கப்படும்' என, சென்னை பி.எஸ்.என்.எல்., அறிவித்து உள்ளது. இதுகுறித்து, அந்த நிறுவன பொதுத் தொடர்பு துணை பொது மேலாளர் விஜயா வெளியிட்டுள்ள அறிக்கை:


பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின், ஜி.எஸ்.எம்., சிம் கார்டுகள், ஜன., 14ம் தேதி வரை இலவசமாக வழங்கப்படும். 'பிரீ பெய்டு' திட்டத்தில் இணையும் புதிய வாடிக்கையாளர்களுக்கு, 1 நிமிடம் மற்றும் 1 வினாடி அடிப்படையில், முதல் இரு மாதங்களுக்கு கட்டண குறைப்பு இருக்கும்.வினாடி அடிப்படையில் உள்ள, 36 ரூபாய் திட்டம், நிமிடம் அடைப்படையில் உள்ள, 37 ரூபாய் திட்டங்களில் இணையும் புதிய வாடிக்கையாளர்களுக்கு இச்சலுகை உண்டு.

நடைமுறையில் உள்ள, 37 ரூபாய் திட்டத்தில், உள்ளூர் அழைப்பு, எஸ்.டி.டி., மற்றும் டேட்டா இணைப்பு, வினாடிக்கு, 10 பைசா கட்டணம்.இதே திட்டத்தில், டேட்டா இணைப்பு இல்லாமல், உள்ளூர் அழைப்பு மற்றும் எஸ்.டி.டி., அழைப்புகளுக்கு, வினாடிக்கு, 30 பைசா கட்டணம்.நடைமுறையில் உள்ள, 36 ரூபாய் திட்டத்தில், உள்ளூர், எஸ்.டி.டி., அழைப்புகள் மற்றும் டேட்டா இணைப்புக்கு, 3 வினாடிகளுக்கு, 1 பைசா கட்டணம். டேட்டா இணைப்பு இல்லாமல், உள்ளூர், எஸ்.டி.டி., அழைப்புகளுக்கு, 3 வினாடிகளுக்கு, 2 பைசா கட்டணம்.இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.-

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி