மின் கணக்கீட்டாளர் வராவிட்டால் முந்தைய மாத தொகையில் 50% கட்டணம்

வீட்டு மின் இணைப்பு கணக்கீடு செய்ய முடியாத இடங் களில், பொதுமக்களிடம் கடந்த மாத தொகையில் 50 சதவீதம் மட்டுமே வசூலிக்கப்படும் என மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த அக்டோபர் இறுதி முதல் கடந்த வாரம் வரை பெய்த வடகிழக்கு பருவமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங் கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. வெள்ள நீர் பல பகுதி களில் சூழ்ந்ததால், மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் இன்னலுக்குள்ளாகினர்.

இந்நிலையில், பொதுமக்களுக்கு சலுகை அளிக்கும் வகையில், இம்மாதம் மின் கட்டணம் செலுத்த வேண்டி யவர்கள் அபராதமின்றி ஜனவரி 31-ம் தேதி வரை கட்டலாம் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

இந்நிலையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூரில் உள்ள வீட்டு மின் இணைப்பு பெற்ற வாடிக்கை யாளர்கள், தற்போதைய மின் கட்டணத்தை அபராத மின்றி ஜனவரி 31-ம் தேதி வரை செலுத்தலாம் என ஏற்கனேவே கூறப்பட்டது.

கணக்கீட்டாளர் நேரடியாக சென்று கணக்கீடு செய்த பகுதிகளில் அதில் உள்ள தொகையை மட்டும் செலுத்தினால் போதும். நேரடியாக கணக்கீடு செய்ய கணக்கீட்டாளர் வர முடியாத இடங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் முந்தைய மாத கட்டணத் தில் 50 சதவீதத்தை மட்டும், ஜனவரி 31-க்குள் செலுத்தினால் போதும். இது தொடர்பாக, மின்வாரிய கணக்கீட்டாளர்களுக்கு சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி