முகேஷ் அம்பானிக்குச் சொந்த மான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது சேவையை தொடங்கியது. நிறுவனர் திருபாய் அம்பானியின் 83-வது பிறந்த நாளான டிசம்பர் 27-ம் தேதி தொலைத் தொடர்பு சேவையை இந்நிறுவனம் தொடங்கியுள்ளது
.மும்பையில் ஞாயிற்றுக் கிழமை மாலை நடைபெற்ற மிகப் பிரம்மாண்டமான நிகழ்ச்சியில் 35 ஆயிரம் ரிலையன்ஸ் ஊழியர் கள் பங்கேற்றனர். சோதனை ரீதியில் இந்த சேவை ஊழியர் களுக்கு முதல் கட்டமாக வழங்கப் படுவதாக நிறுவனர் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் முகேஷ் அம்பானி மனைவி நீடா அம்பானி, மகன்கள் மற்றும் மகள், தாய் கோகிலாபென் மற்றும் சகோதரர் அனில் அம்பானி ஆகியோர் கலந்து கொண்டனர்.80 ஆயிரம் பேர் இந்த நிகழ்ச்சியை மொபைல் மூலம் பார்க்கும் வசதி (வீடியோ இணைப்பு) செய்யப்பட்டிருந்தது. நாடு முழுவதும் இந்நிகழ்ச்சி 1,072 இடங்களில் நேரடியாக பார்க்கும் வசதியை நிறுவனம் செய்திருந்தது. இசையமைப் பாளர் ஏ.ஆர். ரஹ்மான், பாலிவுட் நட்சத்திரம் ஷாருக்கான் ஆகியோர் இவ்விழாவில் பங்கேற்ற முக்கிய நட்சத்திர விருந்தினர்களாவர்.மொபைல் மற்றும் இன்டர் நெட் உபயோகப்படுத்தும் 230 நாடுகளில் இந்தியா 150 இடங்களுக்குள் உள்ளது. இந்த உலகமே தொழில்நுட்பப் புரட்சியில் நுழையும்போது இந்தியா பின்தங்கிவிடக்கூடாது. அதற்காக ரிலையன்ஸ் ஜியோ புதியதாக நான்காம் தலைமுறை அலைக்கற்றை சேவையை அறிமுகப்படுத்துகிறது.
130 கோடி மக்களின் வாழ்க் கையை மாற்றியமைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதை ரிலையன்ஸ் ஜியோ சரிவர பயன்படுத்திக் கொள்ளும் என்றும், இந்த சேவை மூலம் தற்போது இன்டர்நெட், மொபைல் உபயோகத்தில் 150-வது இடத்தில் உள்ள இந்தியா அடுத்த சில ஆண்டுகளில் முதல் 10 இடங்களுக்குள் முன்னேறிவிடும் என்று உறுதிபட தெரிவித்தார்.
இருவழி பேச்சுவார்த்தை நடத்தும் முறையில் (வீடியோ கான்ஃபரன்சிங்) ஏற்பாடு செய் யப்பட்டிருந்தது. இதனால் ஊழியர்களுடன் முகேஷ் அம்பானி உரையாடி அவர்களது கருத்துகளைக் கேட்டறிந்தார்.