என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு என்.எச்.பி.சி. மின் நிறுவனத்தில் 229 பணிகள்

தேசிய நீர்மின் நிறுவனத்தில் என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு 229 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.


இது பற்றிய விவரம் வருமாறு:–

தேசிய நீர்மின் உற்பத்தி நிறுவனம் சுருக்கமாக என்.எச்.பி.சி. என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் டிரெயினி என்ஜினீயர், டிரெயினி ஆபீசர், மருத்துவ அதிகாரி, சட்ட அதிகாரி, எச்.ஆர். உள்ளிட்ட பணியிடங்களுக்கு 130 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதேபோல மற்றொரு அறிவிப்பின்படி கேட் தேர்வின் அடிப்படையில் 99 டிரெயினி என்ஜினீயர் மற்றும் அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மொத்தம் 229 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளது.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை பார்ப்போம்...

வயது வரம்பு:

ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அதிகபட்சம் 35 வயதுடையவர்களுக்கு பணி உள்ளது. அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வும் அனுமதிக்கப்படுகிறது.

கல்வித் தகுதி:

பி.இ., பி.டெக்., பி.எஸ்சி (என்ஜினீயரிங்), சிவில் என்ஜினீயரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சி.ஏ., எம்.பி.பி.எஸ். படித்தவர்களுக்கும் குறிப்பிட்ட பணியிடங்கள் உள்ளன.

தேர்வு செய்யும் முறை:

எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

கட்டணம் :

பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ஸ்டேட் வங்கி வழியாக ரூ.250 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், மாற்றுத் திறனாளிகள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

விண்ணப்பிக்கும் முறை:

இணையதளம் வழியாக மட்டுமே இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். விருப்பம் உள்ளவர்கள் கட்டணம் செலுத்தி, இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 18–12–15–ந் தேதி வரை விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும்.

கேட் பணிகள்:

கேட் தேர்வு அடிப்படையில் நிரப்பப்படும் 99 பணியிடங்களில் எலக்ட்ரிக்கல், சிவில், மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்தவர்கள் மற்றும் ஜியாலஜி படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது.

இவர்கள் 1–4–16 தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். ஏற்கனவே கேட் தேர்வுக்கு விண்ணப்பித்து இருப்பவர்கள், இணையதளம் வழியாக இந்த பணிகளுக்கு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பம் 1–1–16 முதல் 1–2–16 வரை செயல்பாட்டில் இருக்கும்.

இவை பற்றிய கூடுதல் விவரங்களை   www.nhpcindia.com   என்ற இணையதளத்தில் 

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி