கோயில்களுக்கு ஜனவரி 1-ம் தேதி முதல் ஜீன்ஸ், லெகிங்ஸ், டிரவுசர் அணிந்துவர தடை: உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் அறநிலையத் துறை சுற்றறிக்கை

ஜீன்ஸ், லெகிங்ஸ், டிரவுசர் போன்ற ஆடைகள் அணிந்து வருபவர்களை பாரம்பரியமிக்க கோயில்களுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று அறநிலையத் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இந்த ஆடைக் கட்டுப்பாடு வரும் ஜனவரி 1-ம் தேதி அமலுக்கு வருகிறது. உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.திருச்சி மாவட்டம் மருங்காபுரி பழையபாளையம் அக்கியம்பட்டியில் உள்ள செண்பக விநாயகர் கோயில் திருவிழாவில் கலை நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இதன் மீதான விசாரணை கடந்த 1-ம் தேதி நடந்தது. அப்போது, கோயில் நிகழ்ச்சிகளுக்கு பல நிபந்தனைகளை விதித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், ஆடைக் கட்டுப்பாடு குறித்தும் உத்தரவிட்டார்.

அவர் தனது உத்தரவில் கூறியதாவது:
கோயில்களுக்கு செல்லும் போது ஒழுக்கமான ஆடைகள் அணி வது, சுத்தம், நாகரிகம் ஆகிய வற்றை அனைத்து மதங்களும் கற்பிக்கின்றன. கிறிஸ்தவ, இஸ்லா மிய மதங்களில் வழிபாட்டுக்கு செல்லும்போது தனி ஆடைக் கட்டுப் பாடு உள்ளது. இந்து கோயில் களுக்கு செல்லும் பக்தர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு விதிப்பது தொடர்பாக அறநிலையத் துறை விரைவில் முடிவெடுக்க வேண்டும்.அறநிலையத் துறைக்கு உத்தரவுதமிழகத்தில் உள்ள இந்து கோயில்களில் 2016 ஜனவரி 1-ம் தேதி முதல் ஆண்கள் வழக்கமான மேலாடையுடன் வேஷ்டி, பைஜாமா, பேன்ட்டும், பெண்கள் மேலாடையுடன் கூடிய சுடிதார், சேலை, தாவணியும், குழந்தைகள் முழுமையாக மூடப்பட்ட ஏதாவது ஒரு ஆடையும் அணிந்து வரவேண்டும். மாறாக, அரை டிரவுசர், ஷார்ட்ஸ், மினி ஸ்கர்ட், மிடி, கையில்லாத மேலாடை, இடுப்புக்கு கீழ் நிற்கும் ஜீன்ஸ், இடுப்புக்கு மேல் நிற்கும் டி-ஷர்ட் போன்றவற்றை அணிந்து வருபவர்களை கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது. சீருடையை அனுமதிக்கலாம் போலீஸார், தீயணைப்பு துறையினர், மீட்பு படையினர், பாதுகாவலர்கள் அவர்களது சீருடையில் வர அனுமதிக்கலாம். இந்த ஆடைக் கட்டுப்பாட்டை தீவிர மாக அமல்படுத்துமாறு அனைத்து கோயில்களுக்கும் அறநிலையத் துறை கடிதம் அனுப்ப வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தர விட்டார்.இதைத் தொடர்ந்து, கோயில் களின் பாரம்பரியத்துக்கு ஏற்ப ஆடைக் கட்டுப்பாட்டை பின்பற்று மாறு தனது கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு இந்து சமய அறநிலையத் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இதுதொடர்பாக துறையின் உயர் அதிகாரிகள் கூறியதாவது:திருச்செந்தூர் கோயிலில் ஆண்கள் மேலாடை அணியக் கூடாது. கன்னியாகுமரி கோயிலில் பேன்ட் அணியக் கூடாது. இது மட்டுமின்றி, பெண்கள் துப்பட்டா இல்லாத ஆடைகள், லெகிங்ஸ், ஜீன்ஸ், டி-ஷர்ட் போன்றவற்றை அணியக்கூடாது. ஆண்கள் அரை டிரவுசர் அணியக் கூடாது என்று தமிழகத்தின் பல கோயில்களில் கட்டுப்பாடுகள் உள்ளன. இதற்கு ஆலய நுழைவுச்சட்டம் 1949-ன் 4-வது விதி அனுமதி அளிக்கிறது.இத்தகைய கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுவதை உறுதிப் படுத்தக் கோரி3 அல்லது 6 மாதத்துக்கு ஒருமுறை சுற்றறிக்கை அனுப்புவோம். ஆனால், இந்த ஆடைக் கட்டுப்பாடு முறையாக பின்பற்றப்படுவதில்லை. தற்போது நீதிமன்ற உத்தரவின்படி, வரும் ஜனவரி 1-ம் தேதி முதல்அத்தகைய ஆடைக் கட்டுப்பாடு களை கண்டிப்பாக பின்பற்றுமாறு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. சிறிய கோயில்களில் அந்தந்த கோயில் நிர்வாகங்களின் வழிகாட் டுதல்படி ஆடைக் கட்டுப்பாடு பின்பற்றப்பட வேண்டும்.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

அறிவிப்பு பலகைகள்

‘துப்பட்டா இல்லாத ஆடைகள், லெகிங்ஸ், ஜீன்ஸ், அரை டிரவுசர் போன்றவற்றை அணிந்து வருபவர்கள் ஜனவரி 1-ம் தேதி முதல் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்’ என்ற அறிவிப்பு பலகையைதயார் செய்யும் பணியில் கோயில் நிர்வாகங்கள் ஈடுபட்டுள்ளன.கேரள கோயில்கள், கேரளாவை ஒட்டிய தமிழக கோயில்களில் பாரம்பரிய ஆடைக் கட்டுப்பாடு பலகாலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. திருப்பதி கோயிலிலும் கட்டண சேவைகளில் இந்த கட்டுப்பாடு சமீபகாலமாக கடை பிடிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி