இளைஞர்களுக்கு நல்ல செய்தி...! ரயில்வேயில் 18252 வேலைவாய்ப்பு!!

இந்திய ரயில்வே துறையில் 18,252 வேலைவாயப்புகள் காத்திருப்பதாக தகவல் வந்துள்ளது. உதவி ஸ்டேஷன் மாஸ்டர் உள்ளிட்ட ஏராளமான பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தப் பணியிடங்களை ரயில்வே நியமன வாரியம் (ஆர்ஆர்பி)  நிரப்பவுள்ளது.

கமர்ஷியல் அப்பரண்டீஸ் பிரிவில் 703 பணியிடங்களும், டிராபிக் அப்ரண்டீஸ் பிரிவில் 1645 பணியிடங்களும், என்கொயரி கம் ரிசர்வேஷன் கிளார்க் பிரிவில் 127 பணியிடங்களும், கூட்ஸ் கார்ட் பிரிவில் 7591 பணியிடங்களும், ஜூனியர் அக்கவுன்ட்ஸ் அசிஸ்டெண்ட் கம் டைப்பிஸ்ட் பிரிவில் 1205 பணியிடங்களும், சீனியர் கிளாக் கம் டைப்பிஸ்ட் பிரிவில் 869 பணியிடங்களும், உதவி ஸ்டேஷன் மாஸ்டர் பிரிவில் 5942 பணியிடங்களும், டிராபிஸ் அசிஸ்டெண்ட் பிரிவில் 166 பணியிடங்களும், சீனியர் டைம் கீப்பர் பிரிவில் 4 பணியிடங்களும் காலியாகவுள்ளன

இந்தப் பணியிடங்களுக்கான கல்வித் தகுதி, வயதுத் தகுதி உள்ளிட்ட விவரங்களை ஆர்ஆர்பி இணையதளமான secure.rrb.gov-ல் காணலாம். இந்தப் பணியிடங்களுக்கு தகுந்த ஆவணங்களுடன் ஜனவரி 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி