யுபிஎஸ்சி : டிச.18-ல் ஐஏஎஸ் முதன்மை தேர்வு: ஆன்லைனில் ஹால்டிக்கெட்அறிவிக்கப்பட்டபடி சிவிஸ் சர்வீசஸ் முதன்மைத் தேர்வை வரும் 18-ம் தேதி தொடங்க யுபிஎஸ்சி முடிவு செய்துள்ளது.
ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வு, டிசம்பர் 18 முதல் 23-ம் தேதி வரை நடத்தப்படும் என்று மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) அறிவித்திருந்தது. தமிழகத்தில் சென்னை உட்பட நாடு முழுவதும் 23 மையங்களில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத உள்ளனர்.
யுபிஎஸ்சி இணையதளத்தில்..

இந்நிலையில், கனமழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தமிழக மாணவர்கள் நலன் கருதி முதன்மைத் தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், ஏற்கெனவே திட்டமிட்டபடி வரும் 18-ம் தேதி தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை யுபிஎஸ்சி மேற் கொண்டுள்ளது. முதன்மைத் தேர்வு எழுதுவோருக்கான ஹால் டிக்கெட், யுபிஎஸ்சி இணையதளத்தில் (www.upsc.gov.in) நேற்று முன்தினம் பதிவேற்றம் செய்யப்பட்டது. விண்ணப்பதாரர்கள் ஹால்டிக்கெட்டை இந்த இணையதளத்தில் இருந்து பதிவிறக் கம் செய்துகொள்ளலாம் என்று யுபிஎஸ்சி அறிவித்துள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி