ஐஏஎஸ், ஐபிஎஸ் முதன்மைத் தேர்வு: 15 ஆயிரம் பேர் எழுதினர்

ஐஏஎஸ்,. ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வு இந்தியா முழுவதும் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. முதல்நிலைத் தேர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற நிலையில், முதன்மைத் தேர்வு இந்தியா முழுவதும் இன்று நடைபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் உள்ள 153 தேர்வு மையங்களில் 15 ஆயிரம் பேர் எழுதினர்.

தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த மாணவர்களுக்கு சென்னை காயிதே மில்லத் கல்லூரியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 864 பேர் தேர்வை எழுதினர். 1200 பணியிடங்களை நிரப்புவதற்கான இந்த தேர்வு இன்று தொடங்கி வரும் 9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மார்ச் மாதம் தேர்வு முடிவுகள் வெளிடப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கான நேர்முகத் தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெறுகிறது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி