10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு

ஜனவரி 11ம் தேதி தொடங்கும் அரையாண்டு தேர்விற்கான கால அட்டவணை வெளியிடப்பட்டது.டிசம்பர் 7ஆம் தேதி முதல் நடைபெறவிருந்த அரையாண்டு தேர்வுகள் மழையால் ஒத்திவைக்கப்பட்டிருந்தன

ஜனவரி 2ஆவது வாரத்தில் தேர்வுகள் நடைபெறும் என முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்த நிலையில், ஜனவரி 11ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வுகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. அரையாண்டு பொதுத்தேர்வு அட்டவணை விவரம் வருமாறு:

தேதி            பாடம்

11-1-2016 தமிழ் முதல் தாள்

12-1-2016 தமிழ் இரண்டாம் தாள்

13-1-2016 ஆங்கிலம் முதல் தாள்

14-1-2016 ஆங்கிலம் இரண்டாம் தாள்

18-1-2016 வணிகவியல், மனை அறிவியல், புவியியல்

19-1-2016 கணிதம், மைக்ரோ-பயாலஜி, விலங்கியல்,கணக்குப்பதிவியல் மற்றும்தணிக்கையியல் (தியரி),உணவு மேலாண்மை, குழந்தை பராமரிப்பு, விவசாய பயிற்சி, 'நியூட்ரிசன் அன் டயாடெடிக்ஸ்', 'டெக்ஸ்டைல்ஸ் டிசைனிங்',அரசியல் அறிவியல், நர்சிங்

21-1-2016 இயற்பியல், பொருளாதாரம், அலுவலக மேலாண்மை, ஆட்டோ-மெக்கானிக், ஜெனரல் மசினிஸ்ட்', 'எலக்ட்ரானிக்ஸ் எக்யூப்மென்ட்', 'டிராட்ஸ்மென் சிவில்', 'எலக்ட்ரிக்கல் மசின்ஸ் அன் அப்ளையன்சஸ்', 'டெக்ஸ்டைல் டெக்னாலஜி'

23-1-2016 வேதியியல், கணக்குப்பதிவியல்

25-1-2016 உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம்

27-1-2016 தகவல்தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், உயிரி வேதியல், மேம்பட்ட மொழி (தமிழ்), புள்ளியியல்


எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு அட்டவணை:


11-1-2016 தமிழ் முதல் தாள்

13-1-2016 தமிழ் இரண்டாம் தாள்

18-1-2016 ஆங்கிலம் முதல் தாள்

20-1-2016 ஆங்கிலம் இரண்டாம் தாள்

22-1-2016 கணிதம்

25-1-2016 அறிவியல்

27-1-2016 சமூக அறிவியல்

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி