ஜாதி, வருமான சான்றிதழ் பள்ளிகளில் மையங்கள்

பள்ளி மாணவர் களுக்கு, ஜாதி, வருமான மற்றும் இருப்பிட சான்றிதழ் வழங்க, தாலுகாவுக்கு, நான்கு பள்ளிகளில் ஒருங்கிணைந்த மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கடந்த சில ஆண்டுகளாக, பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, சான்றிதழ் வழங்கப்பட்டன. முகாமைத் தவறவிடும் மாணவர்கள், கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், தாசில்தார் ஆகியோரிடம் கையொப்பம் பெற்று, சான்றிதழ் வாங்கி வந்தனர்.

தற்போது, தாலுகாவுக்கு, நான்கு பள்ளிகளில், ஒருங்கிணைந்த சான்றிதழ் வழங்கும் மையங்கள் அமைக்கப்படுகின்றன. இனி, தாலுகா அலுவலகங்களுக்கோ, இ-சேவை மையங்களுக்கோ மாணவர்கள் அலைய வேண்டியதில்லை; சம்பந்தப்பட்ட மையங்களுக்கு சென்று விண்ணப்பித்து, சான்றிதழ் பெறலாம் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.-

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி