பெல் நிறுவனத்தில் லேப் டெக்னீசியன், கிளார்க், பொறியாளர் பணி

மத்திய அரசின்கீழ் மகாராஷ்டிரா புனேவில் செயல்பட்டு வரும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் எனப்படும் பெல் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள லேப் டெக்னீசியன், கிளார்க், தொழில்நுட்பவியலாளர் மற்றும் பொறியியல் உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்னப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

.
காலியிடங்கள்: 31

1. Deputy Engineer (Electronics)- 04

2. Deputy Engineer (Mechanical)- 11

3. Lab Technician-C- 02

4. Technician-C- 06

5. Clerk-cum-Computer Operator-C- 04

6. Engineering Assistant- 04
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேஷன் போன்ற பொறியியல் பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

லேப் டெக்னீசியன்-சி பணிக்கு இயற்பியல், ஒளியியல் பிரிவில் பி.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.டெக்னீசியன்-சி பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ முடித்து 1 ஆண்டு அப்ரண்டீஸ் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.கிளார்க் பணிக்கு பி.காம் முடித்திருக்க வேண்டும். கணினி துறையில் MSCIT சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பொறியியல் உதவியாளர் பணிக்கு பொறியியல் படிப்பில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 01.11.2015 தேதியின்படி பொது பிரிவினருக்கு 28-க்குள்ளும், பிற்பட்டோருக்கு 31-க்குள்ளும், SC / ST பிரிவினருக்கு 33-க்குள் இருக்க வேண்டும். மாற்றுதிறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500, மற்ற பிரிவினருக்கு ரூ.300. இதனை Bharat Electronics Limited என்ற பெயருக்கு புனேவில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Dy. General Manager (HR& A),

Bharat Electronics Limited, NDA Road,

Pashan, Pune - 411021 (Maharashtra)

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:09.12.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://bel-india.com/sites/default/files/Recruitments/ShortTermEngers.-BEL-webAD-24.11.2015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி