ஆன்லைன்’ மாணவர் சேர்க்கை பாரதியார் பல்கலை திட்டம்

கோவை: பாரதியார் பல்கலையின் தொலைமுறைக் கல்விக்கூடம், ஆன்லைன் முறையிலான சேர்க்கையை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

பாரதியார் பல்கலையின் தொலைமுறை கல்வி கூடத்தில், 51 இளங்கலை, 33 முதுகலை, 34 எம்.பி.ஏ., பாடப்பிரிவுகள், 31 முதுகலை டிப்ளமோ, படிப்புகள் மற்றும் எம்.சி.ஏ., எம்.எட்., பி.எட்., படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் இக்கல்வி முறையில் பயின்று வருகின்றனர். அங்கீகரிக்கப்பட்ட கல்வி மையங்கள் மற்றும் பல்கலையின் தொலைமுறைக் கல்வி கூடத்தில் நேரடியாக விண்ணப்பங்கள் பெற்று மாணவர்கள் சேர்க்கை புரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், வெளியூர் மாணவர்களின் அலைச்சலை குறைக்கவும், சேர்க்கையை அதிகரிக்கும் விதத்திலும், ஆன்லைன் முறையில் மாணவர் சேர்க்கையை கொண்டு வர பல்கலை திட்டமிட்டுள்ளது. பல்கலை தொலைமுறை கல்விக்கூட அதிகாரி ஒருவர் கூறுகையில், தொலைமுறை கல்விக்கூடத்தில் கம்ப்யூட்டர் பிரிவானது உரிய மென்பொருள் மூலம் மேம்படுத்தப்பட்டுள்ளது. 

தொலைமுறையில் பயிலும் மாணவர்களின் நலன் கருதி, அவர்களின் அலைச்சலை குறைக்க ஆன்லைன் மாணவர் சேர்க்கையை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். இதற்கென, எண்ட் டூ எண்ட் எனும் மென்பொருள் தேவைப்படுகிறது. புதிய துணைவேந்தர் பதவியேற்றவுடன், இதற்கான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்படும் என்றார்

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி