தினமும் தேசிய கீதம் பாடி வகுப்புகளை தொடங்கவேண்டும்: சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடங்களுக்கு உத்தரவு

நாட்டில் உள்ள மாணவர்களுக்கு தேசப்பற்றை உருவாக்கும் வகையில், தினமும் வகுப்புகள் தொடங்கும் முன்பு தேசிய கீதம் பாடியே தொடங்கவேண்டும் என்று மத்திய செகண்டரி கல்வி போர்டு (சி.பி.எஸ்.இ.). பள்ளிக்கூடங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கொல்கத்தா ஐகோர்ட்டில் உலகில் பல நாடுகளில் இருப்பதுபோல, தேசிய கீதம் பாடியே பள்ளிக்கூடங்களை தொடங்கவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. 

இந்த உத்தரவுக்கேற்ப, மத்திய செகண்டரி கல்வி வாரியம், நாட்டில் உள்ள அனைத்து சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடங்களுக்கும் ஒரு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதன்படி, தினமும் பள்ளிக்கூடம் தொடங்கும்போது, தேசிய கீதத்தை இசைத்தோ, மாணவர்களால் பாடச்சொல்லியோ தான் தொடங்கவேண்டும். மாணவர்களுக்கு தேசிய கீதம் பாடுவதற்கான பயிற்சிகளை அளிக்கவேண்டும். நாட்டின் மீதும், தேசியகொடியின் மீதும் பற்று ஏற்படும் வகையிலான நடவடிக்கைகளை பள்ளிக்கூடங்கள் மேற்கொள்ளவேண்டும் என்றுஅந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.பொதுவாக அனைத்து பள்ளிக்கூடங்களிலும் வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பு இறைவணக்கம் பாடி தொடங்குகிறார்கள். இத்தகைய பள்ளிக்கூடங்களில் இனி தேசிய கீதமும் இசைக்கப்பட வேண்டும் அல்லது மாணவர்களால் பாடப்படவேண்டும் என்பதுதான் இந்த உத்தரவின் தார்ப்பரியம் என்று கல்வியாளர் ஒருவர் தெரிவித்தார். சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடங்களுக்கு பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு, மாநில அரசின் உதவிபெறும் பள்ளிக்கூடங்களுக்கு பொருந்தாதது. 

என்றாலும், இது மிக நல்ல ஒரு முயற்சி என்ற வகையில், இதை மாநில அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களிலும், சுயநிதி பள்ளிக்கடங்களிலும் மட்டுமல்லாமல், அனைத்து கல்லூரிகளிலும் தொடங்க தமிழக அரசும் நடவடிக்கை எடுக்கவேண்டும். பள்ளிக்கூட கல்வித்துறையும், கல்லூரி கல்வித்துறையும் இதற்கான முயற்சிகளை பிறப்பிக்கவேண்டும் என்று அந்த கல்வியாளர் தெரிவித்தார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி