சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர்

உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக டி.எஸ்.தாக்கூர் நியமிக்கப்படுகிறார்.

தற்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள எச்.எல்.தத்துவின் பதவிக்காலம் வருகிற டிசம்பர் 2-ம் தேதியுடன் முடிவடைகிறது.

இதையடுத்து புதிய தலைமை நீதிபதியை நியமிக்கும் பணியை மத்திய அரசு மேற்கொண்டு வந்தது. இந்த பதவிக்காக மூத்த நீதிபதியான டி.எஸ்.தாக்கூரை தற்போதைய தலைமை நீதிபதி தத்து பரிந்துரை செய்திருந்தார்.

இந்த பரிந்துரையை மத்திய அரசு பரிசீலனை செய்து, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கும். அதன்பின்னர் ஜனாதிபதியின் ஒப்புதலுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.

தத்து ஓய்வு பெறும் டிசம்பர் 2-ம் தேதியன்று, தாக்கூர் புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கும் தாக்கூர், 2017ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி வரை அந்த பொறுப்பில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி