மாநில அளவில் நடந்த திருக்குறள் ஒப்புவித்தல், கட்டுரைபோட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பார்லிமென்டில்டிச.,17ல் பாராட்டு விழாநடக்கிறது.பா.ஜ., எம்.பி., தருண் விஜய் முயற்சியால் மாநிலஅளவில் பள்ளி,கல்லுாரி மாணவர்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல், கட்டுரைபோட்டி நடந்தது. நவ., 1ல் திருவள்ளுவர் மாணவர் இளைஞர்மன்றம் சார்பில் தமிழக அளவில் போட்டிகள் மதுரையில்நடத்தப்பட்டன.
இதில் 133 மாணவர்கள் வென்றனர்.வெற்றி பெற்ற சிலர்: பள்ளிகள்அளவில் காரைக்குடி ஸ்ரீகலைவாணி பள்ளி பிளஸ் 1 மாணவிபானுப்பிரியா முதலிடம் பெற்றார். சிவகங்கை மாவட்ட அளவில்காரைக்குடி கிட் அன்ட் கிம் பொறியியல் கல்லுாரி மாணவி சுவாதி,அமராவதிபுதுார் சாரதா நிகேதன் மகளிர் கல்லுாரி மாணவிநாச்சாள், உமையாள் ராமநாதன் கல்லுாரி மாணவி சிவரஞ்சனி,திருப்புத்துார் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் மெட்ரிக் பள்ளிமாணவர் ஜெய்பிரசாத், காரைக்குடி எஸ்.எம்.எஸ்.வி., பள்ளிமாணவர் சூரியபிரகாஷ், காரைக்குடியை சேர்ந்த நிவேதினிகென்சியா (திருச்சி ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரி), திலீபன்(சென்னை லயோலா கல்லுாரி), மணிமேகலை (மதுரை அரசுசட்டக்கல்லுாரி) ஆகியோர் வெற்றி பெற்றனர்.பார்லி.,யில் பாராட்டு:வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, டிச.,17 பார்லிமென்டில் பாராட்டுவிழா நடக்கிறது. மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்ருமிதிராணி தலைமை வகிக்கிறார். பார்லிமென்ட் வளாகம், ஜனாதிபதிமாளிகை, டில்லியில் முக்கிய இடங்களுக்கு அழைத்துசெல்லப்படுவர்.