2014-2015 ஆம் ஆண்டிற்கான கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கு 14.12.2015 அன்று வரை இணைய வழி மூலம் மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.அறிவிக்கை எண்.19/2015
விளம்பர எண்.425
தேதி:12.11.2015
பதவிக் குறியீட்டு எண்:2015
பணி குறியீட்டு எண்:050
பதவி:கிராம நிர்வாக அலுவலர்
காலியிடங்கள்:813
சம்பளம்:மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
கல்வித் தகுதி:12.11.2015 தேதியின்படி பத்தாம் வகுப்பு அல்லது அதற்குச் சமமான கல்வித் தகுதியில் தேர்ச்சி பெற்று மேல்நிலைப்பள்ளி கல்வி அல்லது கல்லூரி கல்வி படிப்பில் சேருவதற்கான தகுதி பெற்று இருக்க வேண்டும்.
கட்டணம் விவரம்:
நிரந்தரப்பதிவுக் கட்டணம்: ரூ.50.
தேர்வுக் கட்டணம்: ரூ.75.
வங்கி அல்லது தபால் அலுவலகம் மூலம் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள்:16.12.2015 நிரந்தர பதிவு முறையில் ஏற்கனவே பதிவு செய்தவர்கள், தேர்வுக்கட்டணம் மட்டும் செலுத்தினால் போதுமானது.
வயதுவரம்பு:01.07.2015 தேதியின்படி ஆதிதிராவிடர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர் மரபினர், பி.வ.(மு) மற்றும் அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கு 21 - 40க்குள் இருக்க வேண்டும். மற்ற பிரிவினர்களுக்கு 21 - 30க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நியமன இடஒதுக்கீட்டு விதியைப் பின்பற்றி தேர்வு செய்யப்படும்.
விண்ணப்பிப்தற்கான கடைசி தேதி:14.12.2015
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 14.02.2016 அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை 3 மணி நேரம் தேர்வு நடத்தப்படும்.