குரூப்-4 நேரடி நியமனம்: நவ.16 முதல் கலந்தாய்வு

குரூப்-4 பணிகளில் நேரடி நியமனத்துக்கான முதல் கட்டக் கலந்தாய்வு நவம்பர் 16 முதல் டிசம்பர் 2 வரை நடத்தப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) தெரிவித்துள்ளது.

இதற்கான எழுத்துத் தேர்வு 2014 டிசம்பர் 21-இல் நடத்தப்பட்டு, முடிவுகள் கடந்த மே 22-இல் வெளியிடப்பட்டது.

இதையடுத்து, முதல் கட்டக் கலந்தாய்வு நவம்பர் 16 முதல் டிசம்பர் 2 வரை சென்னையிலுள்ள தேர்வாணைய அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது.

தகுதியானவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அழைப்புக் கடிதங்கள் விரைவு அஞ்சல், மின்னஞ்சல், குருந்தகவல் ஆகியவற்றின் வாயிலாக அனுப்பப்பட்டுள்ளது.

அழைக்கப்படும் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என்பது உறுதி கிடையாது. தகுதி, காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப தேர்வு நடைபெறும். கலந்தாய்வுக்கு வரத் தவறினால் மறு வாய்ப்பு அளிக்கப்படமாட்டாது என டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி