பிளஸ் 2 மாணவர்களுக்கு முக்கிய வினா விடை ’சிடி’

பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவதற்காக பள்ளி கல்வித்துறை சார்பில் 11 பாடங்களின் முக்கிய வினா விடை அடங்கிய சிடி பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கை எடுத்துவருகிறது. அதன் ஒருபகுதியாக அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிர் தாவரவியல், உயிர்விலங்கியல், வரலாறு, பொருளாதாரம், வணிகவியல், கணக்குப்பதிவியல் ஆகிய 11 பாடங்களுக்கு முக்கிய வினா விடை அடங்கிய ஒரே சிடி தயாரிக்கப்பட்டு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மாவட்ட கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், தமிழ் வழி பாடப்பிரிவு மாணவர்களுக்கான இந்த சிடி அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்களிடமும் வழங்கப்பட்டுள்ளது.

இதை அவர்கள் பாடவாரியாக பிரின்ட் அவுட் எடுத்து ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு கற்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மெல்லக்கற்கும் மாணவர்கள் முதல் 200க்கு 200 எடுக்கும் மாணவர்கள் வரை அனைவருக்கும் இது பயன்பெறும். அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளின் இணையதள முகவரியிலும் இந்த வினா-விடையை பார்த்து படித்துக் கொள்ளலாம், என்றார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி