வை-பை'யை விட100 மடங்கு வேகம் வழங்கும் லை-பை..!!

இண்டர்நெட் வளர்ச்சியின் அடுத்த மைல் கல் இதுவாக தான் இருக்க வேண்டும். லை-பை எனும் புதிய தொழில்நுட்பம் ஒருநாள் வை-பை தொழில்நுட்பத்தை விட 100 மடங்கு வேகத்தில் இண்டர்நெட் வழங்க முடியும். ஆய்வாளர்கள் தற்சமயம் நொடிக்கு 224 ஜிபி வேகம் வரை சோதனை செய்திருக்கின்றனர். இது கண் இமைக்கும் நேரத்தில் 18 திரைப்படங்களை பதிவிறக்கம் செய்வதற்கு சமம் ஆகும்
.

லை-பை அல்லது லைட் ஃபிடெலிட்டி தற்சமயம் நிஜ உலகில் சோதனை பணிகளில் ஈடுப்பட்டுள்ளது எனலாம். எஸ்தோனியாவின் தல்லின் ஆய்வகங்களில் தற்சமயம் நொடிக்கு 1 ஜிபி வேகம் வரை சோதனை செய்யப்பட்டுள்ளது. இது சாதாரண வை-பை தொழில்நுட்பத்தை விட 100 மடங்கு வேகமானதும் குறிப்பிடத்தக்கது.பை-பை தொழில்நுட்பமானது ரேடியோ சிக்னல்களை கொண்டு இண்டர்நெட் வழங்குவதால் குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் டேட்டா வழங்க முடியாது. 2019 ஆம் ஆண்டு வாக்கில் டேட்டா பறிமாற்றம் ஒவ்வொரு மாதமும் 35 க்வின்ட்டில்லியன் அளவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.ஏற்கனவே ரேடியோ சிக்னல்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றது. இந்த சிக்னல்களை வழங்கும் ஸ்டேஷன்கள் 5 சதவீத விழிப்புடன் இயங்குவதால் அதிக டேட்டாக்களை பறிமாற்றம் செய்யும் போது பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்படவும் அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

இதற்கு மாற்றாக கண்டறியப்பட்டுள்ள புதிய தொழில்நுட்பம் தான் லை-பை. எல்ஈடி ப்ளாஷ் மூலம் கற்பனை செய்ய முடியாத வேகத்தில் தகவல்களை அனுப்ப முடியும். இவ்வகை ப்ளாஷ் விளக்குகள் சாதாரண கண்களில் தென்படாத அளவு அதிவகேமாக செயல்படுகின்றது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி