நவ., 10-ல் விண்ணில் பாய்கிறது ஜி-சாட் 15

பெங்களூரு: தொலை தொடர்பு வசதியை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்ப்டடுள்ள ஜிசாட் 15 செயற்கை கோள் வரும் 10ம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

இது குறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள செய்தி குறி்ப்பில் கூறியிருப்பதாவது: தொலை தொடர்பு வசதியை மேம்படுத்தும் விதமாக ஏற்கனவே 2014-ல் ஜிசாட்14 வகை செயற்கை கோள்களும், 2015-ல் ஜிசாட் 6 என்ற செயற்கை கோளும் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.

தற்போது உருவாக்கப்பட்டுள்ள ஜிசாட் 15 செயற்கைகோளில் சிபாண்ட் மற்றும் கியூ பாண்ட்டுகள் பொருத்தப்பட்டுள்ளது. இது தொலை தொடர்பு வசதியை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கை கோளின் மொத்த எடை 3 ஆயிரத்து 164.5கிலோ ஆகும். இதன் ஆயுட்காலம் 12 ஆண்டுகள் என நி்ர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் 10-ம் தேதி பிரெஞ்ச் கயானாவில் இருந்து ஏவப்பட உள்ளது.இவ்வாறு இஸ்ரோ வெளியிட்டுள்ள செய்தியி்ல் கூறப்பட்டுள்ளது

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி