காத்திருப்பு பட்டியலில் உள்ள ரயில் பயணிகளுக்காக "விகல்ப்"திட்டம் அறிமுகம்

முன்பதிவு செய்து காத்திருப்பு பட்டியலில் உள்ள ரயில் பயணிகளின் வசதிக்காக, அதே வழித்தடத்தில் பயணிக்கும் மற்ற ரயில்களில் அவர்களுக்கு இடமளிக்கும் "விகல்ப்" என்ற புதிய திட்டம் நாளை முதல் நடைமுறைக்கு வருவதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து காத்திருப்பு பட்டியலில் இருக்கும் பயணிகளுக்காக, விகல்ப் என்ற புதிய திட்டத்தை ரயில்வே துறை நாளை அறிமுகப்படுத்தவுள்ளது.இந்தத் திட்டத்தின் மூலம், முன்பதிவு செய்த ரயிலில் டிக்கெட் கடைசி வரை உறுதியாகவில்லை என்றால், அதே மார்க்கத்தில் இயங்கும் அடுத்த ரயிலில் டிக்கெட் உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.விகல்ப் திட்டத்தை, இணையம் மூலம் அடுத்த 6 மாதங்களுக்கான டிக்கெட்டைமுன்பதிவு செய்தவர்களால் மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும் ரயில்வே துறை கூறியுள்ளது.

இணையதளம் மூலம் டிக்கெட் பதிவு செய்யும்போது, விகல்ப் என்ற தேர்வையும் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில், அதே வழித்தடத்தில் இயங்கும்அடுத்த ரயிலில் உறுதி செய்யப்பட்ட டிக்கெட் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்று ரயில் திட்டம் நாளை முதல் தில்லி - லக்னோ மற்றும் தில்லி - ஜம்மு வழித்தடத்தில் இயங்கும்ம் ரயில்கள் மூலம் சோதனை மேற்கொள்ளப்படும் என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.முதல் சோதனையில் கிடைக்கும் வரவேற்பைப் பொருத்து மற்ற வழித்தடங்களுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி