
திரு கலாம் அவர்களின் விருப்பங்களாக நமக்கு எடுத்துரைத்த கனவு இந்தியா 2020, அறிவியல் தொழில்நுட்பம், தேசப் பாதுகாப்பு, விவசாயம், வீட்டிற்க்கு ஒரு நூலகம், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, அமைதி, நட்புணர்வு, சமாதானம் போன்றவற்றை பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு, குறிப்பாக மாணவ சமுதாயத்திற்க்கு ஏற்ப்படுத்தும் வண்ணம் இந்த குறுந்தகடு தயாரிக்கப்பட்டுள்ளது. திரு கலாம் விட்டுசென்ற பணியை ஆசிரிய சமூகத்தின் துணையோடு மாணவ சமூகம் தொடர இக்குறுந்தகடு ஊக்கமளிக்கும் வகையில் கோனேரிக்குப்பம் நடுநிலைப்பள்ளியின் ஆசிரியர் திரு ஆரோக்கியராஜ் அவர்களின் குழுவால் தயாரிக்கப்பட்டுள்ளது. இளைஞர்களின் உந்து சக்தியாக விளங்கிய திரு கலாம் அவர்களின் பிறந்த நாளான அக்டோபர் 15 அன்று , இக்குறுந்தகடு வெளியிடப்படுகிறது.