மூன்று ஆண்டு சட்ட படிப்புக்கு உயர் நீதிமன்றம் மீண்டும்'ஓகே!'

'மூன்று ஆண்டு சட்டப் படிப்பு ரத்து; பார் கவுன்சில் பொறுப்பை, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழுவிடம் ஒப்படைக்க வேண்டும்' என, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு, சென்னை உயர் நீதிமன்றம்தடை விதித்துள்ளது.


குற்றப் பின்னணி உடையவர்கள், வழக்கறிஞர் தொழிலுக்கு வருவதைத் தடுக்க, நடவடிக்கை எடுக்கக் கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில், ஆனந்த முருகன் என்பவர் மனு தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த, நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த உத்தரவு:கிரிமினல்கள்,வழக்கு நிலுவை யில் உள்ளவர்கள், வழக்கறிஞர் தொழிலுக்கு வருவதைத் தடுக்கும் விதத்தில், வழக்கறிஞர்கள் சட்டத்தில் திருத்தம் அல்லதுபுதிய சட்டப் பிரிவை கொண்டு வர, மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.இந்திய பார் கவுன்சில் செயல்பாடுகளை, ஆறு மாதங்களுக்குள், ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழுவிடம் ஒப்படைக்க, மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். சட்டக் கல்லூரிகளின் எண்ணிக்கை மற்றும் இடங்களின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைப்பதுடன், மூன்று ஆண்டு சட்டப் படிப்பை, ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டு இருந்தார்.


இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், இந்திய பார் கவுன்சில் சார்பில், மேல்முறையீடு செய்யப்பட்டது. மனுவில், 'குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க, பார் கவுன்சிலுக்கு சந்தர்ப்பம் வழங்க வில்லை. இயற்கை நீதி மீறப்பட்டுள்ளது' என, கூறப்பட்டது.மனுவை, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சிவஞானம் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' விசாரித்தது. பார் கவுன்சில் சார்பில், அதன் தலைவர் மன்னன் குமார் மிஸ்ரா, இணைதலைவர் எஸ்.பிரபாகரன் ஆஜராகினர். 'முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:'பார் கவுன்சிலின் செயல்பாடு களை, ஓய்வு பெற்ற நீதிபதிதலைமையிலான குழுவிடம் ஒப்படைக்க வேண்டும்; சட்டக் கல்லூரிகளின் எண்ணிக்கை, இடங்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்; மூன்று ஆண்டு சட்டப் படிப்பை ரத்து செய்ய வேண்டும்.


'வழக்கறிஞர்கள் சங்கங்களுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை வாபஸ் பெற வேண்டும்' ஆகிய உத்தரவுகளுக்கு, தடை விதிக்கப்படுகிறது.தனி நீதிபதியின் உத்தரவில் சில, பரிந்துரைகளாக உள்ளன. அதை, பார் கவுன்சில் ஆராய வேண்டும். அடுத்த, மூன்று ஆண்டுகளுக்கு, சட்டப் படிப்புக்கான இடங்களை அதிகரிக்க வேண்டாம் என,மாநில அரசுகளுக்கு, பார் கவுன்சில் ஏற்கனவே பரிந்துரைத்துள்ளது.மேல்முறையீட்டு மனு,விசாரணைக்கு ஏற்கப்படுகிறது. மனுவுக்கு, சம்பந்தப்பட்டவர்கள்பதிலளிக்க வேண்டும்.இவ்வாறு, 'முதல் பெஞ்ச்'உத்தரவிட்டுள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி