பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்த பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று அத்துறையின் முன்னாள் இயக்குநர்கள் அரசுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளனர்.
பள்ளிக் கல்வித்துறை முன்னாள் இயக்குநர்கள், இணை இயக்குநர்கள், மாவட்ட முதன் மைக் கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல் வர்கள் ஆகியோர் ஒன்று சேர்ந்து தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஓய்வு பெற்ற அலுவலர் அமைப்பு என்ற புதிய அமைப்பை தொடங்கி யுள்ளனர்.
அந்த அமைப்பின் உயர்நிலைக் குழு கூட்டம் அதன் தலைவர் சி.பழனிவேலு தலைமையில் சென்னை மாநில பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக் கிழமை நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கியத் தீர்மானங்கள் வருமாறு:
தமிழகத்தில் பள்ளிக் கல்வி யின் அனைத்து அம்சங்களையும் ஆய்வுசெய்து தரத்தை மேம் படுத்துவதும், காலத்துக்கேற்ப பள்ளிக் கல்வியில் மாற்றங்களை கொண்டுவருவது குறித்து ஆலோசனைகள் தெரிவிப்பதும் இப்புதிய அமைப்பின் நோக்கமாகும். பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்தும் வகையில் மாநில கல்வி திட்டத்தை பிற கல்வி வாரிய பாடத்திட்டத்துடன் ஒப்பிட்டு ஆய்வு மேற்கொள்ள ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர்.பழனியாண்டி தலைமையில் ஒரு குழு அமைக்கப்படும்.
கல்வியாளர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரின் கருத்துகளை பெற்று ஆய்வுசெய்து புதிய கருத்துரு அரசுக்கு தெரிவிக்கப்படும். ஐஐடி, மருத்துவம், கேட் உள்ளிட்ட அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வுகளில் தமிழக மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெறாததற்கான காரணங்கள் ஆய்வு செய்யப்பட்டு இதுதொடர் பான கருத்துரு அரசிடம் சமர்ப்பிக்கப்படும்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, பொதுச் செயலாளர் கே.மாரியப்பன் வரவேற்றார். பொருளாளர் பி.மணி நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்தார். கூட்டத்தில், முன்னாள் இயக்குநர்கள் எஸ்.பரமசிவம், ஆர்.நாராயணசாமி, எஸ்.சந்திரசேகரன், கே.தேவராஜன், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி உமா மகேஸ்வரி, ரங்கநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அமைப்பின் இணைச்செயலாளர் சிவா.தமிழ்மணி நன்றி கூறினார்.