புது வாக்காளர் அட்டை தேர்தல் அதிகாரி தகவல்

''ஏற்கனவே வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தவர்கள், புதிய அட்டை பெற விரும்பினால், அதற்கு, 001 என்ற தனி படிவம் அளிக்க வேண்டும்,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறியுள்ளார்.

இதுகுறித்து, அவர் நேற்று அளித் பேட்டியில்:வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில், , 20 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. பெயர் சேர்க்க கோரியவர்களுக்கு, முதல் முறையாக, வண்ண அடையாள அட்டை இலவ சமாக வழங்கப்படும்.ஆனால், ஏற்கனவே அடையாள அட்டை வைத்திருந்து, முகவரி மாற்றத்துக்காக விண்ணப்பித்தவர்கள், புதிய அட்டை பெற, 001 படிவம் அளிக்க வேண்டும்; அத்துடன், 25 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

அதை, 'ஆன்லைன்' மூலமாகவும் வழங்கலாம். இப்போது, பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்றம் செய்யக் கோரி வந்த விண்ணப்பங்களை, கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி நடக்கிறது. என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற விவரம், உடனுக்குடன் சம்பந்தப்பட்டவருக்கு, எஸ்.எம்.எஸ்., அல்லது இ-மெயில் மூலம் தெரிவிக்கப்படுகிறது.இவ்வாறு சந்தீப் சக்சேனா கூறினார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி