குழந்தைகள் உரிமைக்காக பாடுபடும் கைலாஷ் சத்யார்த்திக்கு ஹார்வர்டு மனித நேயர் விருது

கைலாஷ் சத்யார்த்தி
அமைதிக்கான நோபல் பரிசை வென்ற கைலாஷ் சத்யார்த்திக்கு ‘இந்த ஆண்டுக்கான ஹார்வர்டு மனித நேயர் விருது’ வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த விருதைப் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமை இவருக்குக் கிடைத்துள்ளது.

சமுதாய முன்னேற்றத்துக்காக பாடுபடுபவர்களை கவுரவிக்கும் வகையில், அமெரிக்காவின் ஹார் வர்டு பல்கலைக்கழகம் ஒவ்வொரு ஆண்டும் ஹார்வர்டு மனித நேயர் விருதை வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விருது சத்யார்த்திக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஹார்வர்டு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குழந்தைகள் உரிமை மற்றும் குழந்தைகள் அடிமைத்தனத்தை ஒழித்தல் ஆகியவற்றுக்காக தொடர்ந்து தனது பங்களிப்பை வழங்கி வருவதற்காக சத்யார்த்திக்கு இந்த விருது வழங்கப்படுகிறது” என கூறப்பட்டுள்ளது.

விருது வழங்கும் விழாவில் இந்த விருதைப் பெற்றுக்கொண்ட பிறகு சத்யார்த்தி பேசும்போது, “லட்சக்கணக்கான ஆதரவற்ற குழந்தைகள் சார்பாக இந்த விருதை ஏற்றுக்கொள்கிறேன். இந்தத் தருணத்தில் குழந்தைகள் அடிமைத்தனத்தை உலகிலிருந்து ஒழிக்க நாம் அனைவரும் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றார்.

இதற்கு முன்பு, மார்ட்டின் லூதர் கிங், ஐ.நா.சபை செயலாளர்கள் கோபி அன்னான், பூட்ரஸ் புட்ரஸ்-கலி, ஜவீர் பெரஸ் டி க்யூல்லர், பான் கி-மூன், நோபல் பரிசு வென்றவர்களான ஜோஸ் ரமோஸ்-ஹோர்தா, பிஷப் டெஸ்மாண்ட் டுடு, ஜான் ஹியூம், எல்லி வீசல் உள்ளிட்டோர் இந்த விருதைப் பெற்றுள்ளனர்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி