தகுதியற்ற பேராசிரியர்கள்… தடுமாறும் தனியார் கல்லூரி மாணவர்கள்!

பள்ளி படிப்பு முடிக்கும் கிராமப்புற மாணவர்களின் உயர் கல்வியை பூர்த்திசெய்வது பெரும்பாலும் கலை அறிவியல் கல்லூரிகளே. ஆனால், தமிழக பல்கலைக்கழகங்களின் கீழ் இயங்கும் சுயநிதி கலை, அறிவியல் கல்லூரிகளில், உதவி பேராசிரியர்களாக பணியாற்றுபவர்களில் பலர் தகுதியற்றவர்களாக உள்ளனர் என்ற புகார் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ள வேலூர் ஊரிஸ் கல்லூரியின் ஓய்வு பெற்ற பேராசிரியர் அய்.இளங்கோவனிடம் பேசினோம்.

“திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கல்வித்தரம், அதன் கீழ் உள்ள கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியரின் தகுதிகள் போன்றவற்றில் பல்கலைக்கழக மானியக் குழுவின் (யூஜிசி) விதிகள் பின்பற்றப்பட்டுள்ளதா என்பது குறித்து மனு செய்திருந்தேன். அதனை விசாரித்த உயர் நீதிமன்றம், ஒரு நிபுணர் குழுவை நியமித்து, ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு யூஜிசி-க்கு உத்தரவிட்டிருந்ததுசென்னை பல்கலைக்கழகத்தின் அப்போதைய பொருளாதாரத் துறை தலைவர் துரைசாமி தலைமையில், கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் குழு அமைக்கப்பட்டு, அவர்கள் பல்கலைக்கழகத்துக்குச் சென்று ஆய்வு நடத்தி, தகவல்களைத் திரட்டி, கடந்த பிப்ரவரி மாதம் யூஜிசி-யிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்கள். அந்த விவரங்களை நான் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெற்றேன். அந்த அறிக்கை அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.

திருவள்ளுவர் பல்கலைக்கழகங்களின் கீழ் 107 கல்லூரிகள் இருக்கின்றன. அதில் 70-க்கும் மேல் சுயநிதிக் கல்லூரிகள். இவற்றில் பணியாற்றும் பேராசிரியர்களில் சொற்பமானவர்களே தகுதியானவர்கள். இந்த ஒரு பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் கீழ் உள்ள சுயநிதிக் கல்லூரிகளிலும் இதேதான் நிலைமை.

அனைத்து பல்கலைக்கழகங்களும் பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறைப்படியே இயங்குகின்றன. யூஜிசியின் 2010 ஒழுங்குமுறை, கல்லூரி பேராசிரியர்களுக்கான குறைந்தபட்ச தகுதியை நிர்ணயித்துள்ளது. அதன்படி ஒருவர் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களோடு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். தேசிய தகுதித் தேர்வு எனப்படும் நெட் (NET) அல்லது மாநில அளவிலான தகுதித் தேர்வு எனப்படும் ஸ்லெட்டிலிலோ (SLET) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இவர்கள் மட்டுமே உதவி பேராசிரியராக பணியாற்ற முடியும்.


திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் மட்டும் 4935 பேராசிரியர்களில் 3384 பேர் தகுதியற்றவர்கள் என்று பல்கலைக்கழகமே அறிக்கை அளித்துள்ளது. தகுதியற்றவர்கள் என்று கூறாமல் அங்கீகரிக்கப்படாதவர்கள் என்று வார்த்தை ஜாலம் காட்டியுள்ளது. இதில் கொடுமை என்னவென்றால் பல கல்லூரியின் முதல்வர்களும் இதில் அடக்கம். கல்வியை வியாபாரம் சார்ந்ததாக பார்ப்பதே இத்தகைய கோளாறுகளுக்கு காரணம். சுயநிதி கல்லூரிகள் அனைத்தும் கட்டணமாக மாணவர்களிடம் இருந்து ஆயிரக்கணக்கில் பணத்தை கறக்கின்றன. ஆனால், அதற்கு தகுந்த தரமான உயர்க்கல்வியை வழங்குவதில்லை

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி