இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு பொதுவான தரவரிசை பட்டியல்வழங்கும், புதிய தரவரிசை திட்டத்தை, மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அனைத்து பல்கலை மற்றும் கலைக்கல்லுாரிகளுக்கு விரைவில் தரவரிசை திட்டம் வரஉள்ளது. இந்தியாவில், 12 ஆயிரம் இன்ஜினியரிங் கல்லுாரிகளும், 20க்கும் மேற்பட்ட ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., நிறுவனங்களும் உள்ளன.
இன்ஜி., கல்லுாரிகளை தேசிய அளவில் தரவரிசைப்படுத்தும் திட்டத்தை, மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. நேற்றுமுன்தினம், இத்திட்டம் அமலுக்கு வந்தது. முதற்கட்டமாக, இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரிகளுக்கு தரவரிசை நிர்ணயிக்கும் திட்டம் அமலாகியுள்ளது. தரவரிசைக்கான சிறப்பு இணையதளத்தில் (https://www. india.org/) கல்லுாரிகளின் செயல்பாடுகள் இணைக்கப்படுகின்றன. இந்த பட்டியலின் படி ஆய்வு மேற்கொண்டு, மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள தரவரிசை முகமை மூலம்தரம் நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த, மூன்று ஆண்டுகளின் செயல்பாட்டின்படி, வரும், ஏப்ரல் மாதம் தேசிய தரவரிசை பட்டியல்வெளியிடப்படும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது. இதேபோல், பல்கலை மற்றும் கல்லுாரிகளுக்கு தனியாக தரவரிசை திட்டம்அமலுக்கு வரஉள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் இந்த திட்டமும் அறிமுகமாக உள்ளது