வாக்காளர் பட்டியல்: இணைய தளம் மூலம் பெயர் சேர்க்கலாம்

சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:–வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கடந்த 20.9.2015 மற்றும் 4.10.2015 (ஞாயிற்றுக்கிழமை) அன்று வாக்குசாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த சிறப்பு முகாம்களை பயன்படுத்தி கொள்ள தவறியவர்கள், அடுத்த சிறப்பு முகாம் வரை காத்திருக்காமல் இணைய தளம் www.elections.tn.gov.in  மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். 

இச்சேவையினை அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் மாநகராட்சி மண்டல/ பகுதி/ வார்டு அலுவலகங்களில் உள்ள பொதுச்சேவை மையங்களில் ரூ.10/– செலுத்தி அனைத்து விதமான விண்ணப்பங்களையும் பதிவு செய்யலாம். பொது மக்கள் இந்த இணைய தள சேவையினை பயன்படுத்தி பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் ஆகியவைகளை மேற்கொள்ளலாம். வாக்காளர்களின் வசதிக்காக மேலும் ஒரு சிறப்பு முகாம் வரும் 11.10.2015 (ஞாயிற்றுக்கிழமை) அன்று அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையில் நடைபெற உள்ளது. இந்த முகாமிலும் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் ஆகியவைகளை மேற்கொள்ளலாம்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி