மும்பை: ‘‘கிராமங்களில் உள்ள மக்களுக்கு வங்கி சேவை செய்வது, அரசு திட்ட சலுகை பெற்றுத்தருவது உட்பட பணிகளை செய்ய தபால் ஊழியர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படும். கிராமங்களில் உள்ள மக்களுக்கு, வயதானவர்களுக்கு தபால் ஊழியர்கள் பல வகையில் உதவலாம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’’ என்று தபால் துறை வங்கியியல் மற்றும் மனித வள மேம்பாட்டு பிரிவு தலைவர் ராமானுஜம் கூறினார்.