வெளிநாடு வேலைக்கு செல்வோர் பாஸ்போர்ட் பெற வழிமுறைகள்

திண்டுக்கல்லில் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் 17.10.2015 மற்றும் 18.10.2015 ஆகிய 2 தினங்கள் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை பாஸ்போர்ட் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர்களின் கைரேகை, புகைப்படம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, சான்றிதழ்கள் கணினியின் மூலம் பதிவேற்றம் செய்யப்படும்.

வெளிநாட்டிற்கு வேலை, படிப்பு, புலம் பெயர்த்தலுக்காக செல்ல விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கென சிறப்பு கருத்தரங்கு 18.10.2015 காலை 10 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது.

இந்த விழிப்புணர்வு கருத்தரங்கானது வெளிநாடு செல்லும் போது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாஸ்போர்ட் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் இமிக்ரேசன் துறை, வருமான வரித்துறை, சுங்கத்துறை மற்றும் பாதுகாக்கும் அரசு சாரா நிறுவனத்தின் உறுப்பினர்களை கொண்டு இந்த கருத்தரங்கு நடத்தப்பட உள்ளது.

வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்வோர் முறையான விசா எப்படி பெறுவது? விசா பெறுவதற்கான வழிமுறைகள், எந்த வேலைக்கு செல்வதற்கு விசா கிடைக்கப்பெற்றுள்ளதோ அதே வேலைக்கு வெளிநாட்டில் பணியில் அமர்த்தப்படுகிறார்களா?, மேல்படிப்புக்கு வெளிநாட்டிற்கு செல்வோர் என்ன செய்ய வேண்டும்.

பாஸ்போர்ட் பெறுவது எப்படி? சுங்கத்துறையில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் என்ன? வெளிநாட்டில் கிடைக்கும் வருமானத்திற்கும், வருமான வரித்துறையில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் என்ன என்பது பற்றியும், வெளிநாடு சென்று தாயகம் திரும்புவோர் விமான நிலையத்தில் கடைபிடிக்க வேண்டிய விபரங்கள் குறித்தும் இந்த கருத்தரங்கின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் பொது மக்கள் மற்றும் பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள் தங்களின் குறைகளையும், சந்தேகங்களையும் கேட்டு தெரிந்து கொள்ளலாம். இந்த அரிய வாய்ப்பினை திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு மண்டல பாஸ்போர்ட் மேலாளர் திரு.எஸ்.மணிஸ்வரராஜா தெரிவித்து உள்ளார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி