சென்னையில் உலக தமிழாசிரியர் மாநாடு

சிவகங்கை :''டிசம்பரில் உலக தமிழாசிரியர், அகில இந்திய ஆசிரியர் கூட்டணி மாநாடு சென்னையில் நடைபெறும்,'' என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் ஜோசப் சேவியர் தெரிவித்தார். அவர் கூறியதாவது: கற்றல் கற்பித்தல் முறையில் பாடங்களை இன்னும் சிறப்பாக நடத்துவது குறித்து ஆய்வு மேற்கொள்ள உலக தமிழாசிரியர்கள் மாநாடு டிசம்பர் 11 முதல் 13ம் தேதி வரை சென்னையில் நடக்கிறது.

இதில் கற்றல் கற்பித்தல் முறையில் பாடங்களை இன்னும் சிறப்பாக மாணவர்களுக்கு கற்றுத்தருவது குறித்து, ஆய்வு கட்டுரைகள் சமர்பிப்பர். சிறந்த கட்டுரைகளுக்கு பரிசு வழங்கப்படும். மேலும், கடினமான பாடத்தை மாணவர்களுக்கு எளிதில் கற்பிக்கும் முறை குறித்து ஆய்வு கூட்டத்தில் ஆசிரியர்கள் விளக்கம் அளிப்பர். உலக தமிழாசிரியர் மாநாட்டில், 45 ஆய்வு கட்டுரை சமர்ப்பிக்கப்படும். டிசம்பர் 19, 20ல் அகில இந்திய ஆசிரியர் கூட்டணி மாநாடு பெங்களூரில் நடக்கிறது. இதில், தமிழகத்தில் இருந்து, 3,௦௦௦ ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர். இம்மாநாட்டில் பங்கேற்க ஆசிரியர்களுக்கு மத்திய அரசு விடுமுறை அளித்துள்ளது. தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியில் இந்திய அளவில் 23 லட்சம் ஆசிரியர்கள் உள்ளனர். இதில் 4 லட்சம் பேர் மாநாட்டில் பங்கேற்பர்.இவ்வாறு அவர் கூறினார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி