புதிய மின் இணைப்புகளுக்கு இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்: அடுத்த ஆண்டு மார்ச்சில் அறிமுகம் ( தினமனி செய்தி )

புதிய மின் இணைப்புகளுக்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் முறை வரும் ஆண்டு மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது என மின்வாரிய அலுவலர்கள் தெரிவித்தனர்.

வீடுகள், தொழில் நிறுவனங்களுக்கான புதிய மின் இணைப்பை விரைந்து வழங்குவதற்கான நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட உள்ளன. 

இதன்படி, மின் இணைப்புக்கான விண்ணப்பம் மின் வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும். இதை உரிய ஆவணங்களுடன் இணைய வழியில் பூர்த்தி செய்து, அளிக்கலாம். தங்களது விண்ணப்பத்தின் நிலை குறித்தும் அறியலாம்.

2016-ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் இந்த முறை அறிமுகம் செய்யப்படும் என மின்வாரிய அலுவலர்கள் தெரிவித்தனர்.

குறைகளைத் தெரிவிக்க சேவை மையம்: இதேபோல், மின் நுகர்வோர் தங்களது குறைகளைத் தெரிவிப்பதற்கான சேவை மையமும் சென்னையிலுள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மானக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட உள்ளது.

சென்னையில் உள்ள மின் வாரியத்தின் கட்டுப்பாட்டு மையத்தில் மின் தடை புகார்கள் மட்டுமே பெறப்படுகின்றன. மின் கட்டணம், மீட்டர்கள் உள்ளிட்ட அனைத்து புகார் அளிக்க முழுமையான கணினி மயமாக்கப்பட்ட வாடிக்கையாளர் சேவை மையம் திறக்கப்பட உள்ளது என்றும் மின்வாரிய அலுவலர்கள் தெரிவித்தனர்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி