சி.பி.எஸ்.இ., தலைவர் தேர்வு செய்ய அறிவிப்பு


சி.பி.எஸ்.இ., புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., கட்டுப்பாட்டில், நாடு முழுவதும், 15,500 பள்ளிகள் உள்ளன. மேலும், பேராசிரியர்களுக்கான 'நெட்' தேர்வு, உயர்கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., மற்றும் மருத்துவக் கல்லுாரி நுழைவுத்தேர்வு மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகியவற்றை சி.பி.எஸ்.இ., நடத்துகிறது.


சி.பி.எஸ்.இ., தலைவராக இருந்த வினித் ஜோஷியின் பதவிக்காலம் முடிந்த நிலையில், 2014 டிசம்பர் முதல், தலைவர் பதவி காலியாக உள்ளது. மத்திய உயர்கல்வித் துறை அதிகாரி ஜேஷு குமார், பொறுப்பு அதிகாரியாக உள்ளார். இந்நிலையில், மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அளித்த, புதிய தலைவருக்கான பட்டியலை, இரு மாதங்களுக்கு முன், உயர்கல்வித் துறை நிராகரித்து விட்டது.

கல்வி மற்றும் அனுபவத் தகுதியை சரியாகக் குறிப்பிடவில்லை என, காரணம் கூறப்பட்டது.இதையடுத்து, மீண்டும் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை, மத்திய மனித வள அமைச்சக தேடல் குழு வெளியிட்டுள்ளது. சி.பி.எஸ்.இ., தலைவர் பதவிக்கு, 'மத்திய கல்வித்துறை இயக்குனர் பொறுப்புக்கு இணையாக, பதவி வகித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி