தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., புதிய தலைவராக, க.அருள்மொழி ஐ.ஏ.எஸ் பதவி ஏற்றார்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுக்கு குறைந்த செலவில் பொது சேவை மையங்கள் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று டி.என்.பி.எஸ்.சி. புதிய தலைவர் க.அருள்மொழி கூறினார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் சி.பாலசுப்பிரமணியன் அரசு பணியாளர் தேர்வாணைய தலைவராக (பொறுப்பு) ஆக இருந்து வந்தார். இந்த நிலையில் புதிய தலைவராக க.அருள்மொழி என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியை அரசு நியமித்தது. இதையொட்டி க.அருள்மொழி டி.என்.பி.எஸ்.சி. தலைவராக பதவி ஏற்றார். பின்னர் அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-இணையதள சேவைதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணையவழி சேவை அனைத்தும் மிக குறைந்த செலவில் விண்ணப்பதாரர்களுக்கு கிடைக்க தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தனது இணையவழி விண்ணப்ப சேவையை, தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தால், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமையிடம் மற்றும் 15 மண்டல அலுவலகங்கள் என 280 இடங்களில் நடத்தப்படும் “இ-சேவை மையங்களுக்கு” (பொது சேவை மையங்கள்) வழங்கியுள்ளது. முதல்கட்டமாக, நிரந்தரப்பதிவு செய்தல், தேர்வுகளுக்கு விண்ணப்பித்தல், விண்ணப்பங்களில் மாறுதல் செய்தல், விண்ணப்பத்தின் நகல் பெறுதல் ஆகிய சேவைகளுக்கு விண்ணப்பதாரர்கள் மேற்கூறிய 280 இ-சேவை மையங்களை அணுகலாம். மேற்படி சேவைகளைப் பெற இ-சேவை மையங்களுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள் பின்வருமாறு:-நிரந்தர பதிவு கட்டணம்1. நிரந்தர பதிவு செய்ய ரூ.502. தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ரூ.303. விண்ணப்பங்களில் மாறுதல் செய்ய ரூ.54. விண்ணப்பங்களில் மாறுதல் செய்து விண்ணப்பத்தின் நகல் பெற ரூ.20விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்திற்கு செலுத்த வேண்டிய நிரந்தர பதிவு கட்டணமான ரூபாய் 50 மற்றும் நிர்ணயிக்கப்பட்ட தேர்வு கட்டணம் ஆகியவற்றையும் இ-சேவை மையங்களிலேயே செலுத்தும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. பணம் செலுத்தியதற்கான ஒப்புகை சீட்டினையும் பெற்றுக்கொள்ளலாம். வெளிப்படையாக நடத்தப்படும்மேற்படி சேவைகள் எல்காட் நிறுவனத்தால் நடத்தப்படும் இ-சேவை மையங்களுக்கும் விரைவில் விரிவுபடுத்தப்படவுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் இந்த சேவையைப் பயன்படுத்தி குறைந்த செலவில் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தேர்வுகள் வெளிப்படையாகவும், நம்பகத்தன்மையுடனும் நடத்தப்படும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நண்பனாக செயல்படும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளின் முடிவு காலதாமதமாக வராது. காலதாமதத்தை தவிர்க்க அனைத்து நடவடிக்கை எடுக்கப்படும்.கிராம நிர்வாக அலுவலர்களை நியமிக்க நடத்தப்படும் தேர்வுக்கான அறிவிப்பு, குரூப்-4 தேர்வு நடத்துவதற்கான அறிவிப்பு ஆகியவை பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு க.அருள்மொழி தெரிவித்தார். பேட்டியின்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளர் விஜயகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா, செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் மற்றும் அரசு கேபிள் டி.வி. நிர்வாக இயக்குனர் குமரகுருபரன் ஆகியோர் இருந்தனர்.

செய்தி வெளியீடு

தமிழக அரசின் இ-சேவை மையங்களில் தேர்வாணையத்தின் இணையவழி விண்ணப்ப சேவை

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்த்தின் இணையவழி சேவை அனைத்தும் மிகக் குறைந்த செலவில் விண்ணப்பதாரர்களுக்கு கிடைக்க தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தனது இணைய வழி விண்ணப்ப சேவையைதமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்தால்,அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள்சென்னை மாநகராட்சி தலைமையிடம் மற்றும் 15 மண்டல அலுவலகங்கள் என  280 இடங்களில் நடத்தப்படும் -சேவை மையங்களுக்கு”(Common Service Centers) வழங்கியுள்ளது.  முதல்கட்டமாக, நிரந்தரப்பதிவு செய்தல்தேர்வுகளுக்கு விண்ணப்பித்தல்விண்ணப்பங்களில் மாறுதல் செய்தல், விண்ணப்பத்தின் நகல் பெறுதல் ஆகிய சேவைகளுக்கு விண்ணப்பதாரர்கள் மேற்கூறிய 280 -சேவை மையங்களை அணுகலாம் மேற்படி சேவைகளைப் பெற -சேவை மையங்களுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள் பின்வருமாறு:-
1.   
நிரந்தரப்பதிவு செய்ய
ரூ. 50/-
2.   
தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க
ரூ 30/-
3.   
விண்ணப்பங்களில் மாறுதல் செய்ய
ரூ 5/-
4.   
விண்ணப்பங்களில் மாறுதல் செய்து விண்ணப்பத்தின் நகல் பெற
ரூ. 20/-

விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்திற்குச் செலுத்த வேண்டிய நிரந்தரப் பதிவுக்கட்டணமான ரூபாய் 50/- மற்றும் நிர்ணயிக்கப்பட்ட தேர்வுக்கட்டணம் ஆகியவற்றையும் இ-சேவை மையங்களிலேயே செலுத்தும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.  பணம் செலுத்தியதற்கான ஒப்புகைச் சீட்டினையும் பெற்றுக்கொள்ளலாம்.
மேற்படி சேவைகள் எல்காட் (ELCOT) நிறுவனத்தால் நடத்தப்படும் இ-சேவை மையங்களுக்கும் விரைவில் விரிவுபடுத்தப்படவுள்ளதுஎனவே விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் இந்த சேவையைப்  பயன்படுத்தி குறைந்த செலவில் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


Press Release
TNPSC’s Online Application Services at Common Service Centers of 
Tamil Nadu Government
In order to offer better e-services with cheaper service charge to the candidates, Tamil Nadu Public Service Commission’s Online application and registration systems has been integrated with the Common Service Centers established by Tamil Nadu Cable TV Corporation (TACTV) in all Taluk Offices, 15 zonal offices of Chennai Corporation and its Head Quarters (Ripon Building). Initially, candidates can register their particulars in one time registration, apply online, edit their application and get printouts of their application in the above said 280 Common Service Centers. The Service charges to be paid to the Common Service Centers for the above services are as follows:-
1.  
One Time Registartion
Rs. 50/-
2.  
Application fetching and Applying for recruitment examination
Rs. 30/-
3.  
Application Editing
Rs. 5/-
4.  
Application Editing with printing
Rs. 20/-
Candidates can also pay the One Time Registration Fee of Rs. 50/- and the  prescribed examination fee to TNPSC through the Common Service Centers and they can get the receipt for the same.
The above said services are likely to be extended shortly to the Common Service Centers established and maintained by ELCOT also. Therefore, candidates are requested to utilize the e-services provided by the Government of Tamil Nadu in reasonable cost and apply for the examination to be conducted by  TNPSC

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி