வேலை வாய்ப்பு - தமிழக அரசு கால்நடை பராமரிப்புத் துறை - 859 காலியிடங்கள்





கால்நடை பராமரிப்பு உதவியாளர்
காலியிடங்கள்: 859

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1,400 மற்றும் இதர சலுகைகள்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வு கால்நடை பராமரிப்பு மருத்துவப் பணிகள் இயக்குநரகத்தில் நடைபெறும்.


வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசுவிதிகளின்படி வயதுவரம்பு தளர்வு அளிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை இயக்குநர், கால்நடை பராமரிப்பு (ம) மருத்துவப் பணிகள், சென்னை - 6 என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் தேசியமயமாக்கப்பட்ட ஏதாவதொரு வங்கியில் டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை: இங்கே கிளிக் செய்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்கள் சுய சான்று செய்து வங்கி டி,டி. இணைத்து அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.09.2015

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Director, Department of Animal Husbandry and Medical Service, Central Office Building, Block-II, DMS Complex, Chennai - 600006.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி