31-ல் போராட்டம்'ஜாக்டோ' முடிவு


   சென்னை:  'ஜாக்டோ' என, அழைக்கப்படும், அரசு ஆசிரியர் சங்க கூட்டுக்குழுவின், மாநிலப் பொதுக்குழுக் கூட்டம், 31ம் தேதி, சென்னையில் நடக்கிறது. இதில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து, முடிவு எடுக்கப்பட உள்ளது.அரசு மற்றும் அரசு உதவிப் பள்ளி ஆசிரியர்களின், 27 சங்கங்கள் இணைந்து, ஜாக்டோ கூட்டுக்குழுவை ஏற்படுத்தியுள்ளன. இந்தக் குழு, இதுவரை நான்கு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டுள்ளது. இதில், 8ம் தேதி நடந்த மாநில அளவிலான வேலை நிறுத்தம் வெற்றி பெற்றது.ஆனாலும், அரசு கண்டு கொள்ளவில்லை; பேச்சுக்கும் அழைக்கவில்லை. இதனால், அதிருப்தி அடைந்துள்ள ஜாக்டோ நிர்வாகிகள், அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவெடுக்க, 31ம் தேதி சென்னையில் ஆலோசனை நடத்த உள்ளனர். இத்தகவலை, ஜாக்டோ ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் தெரிவித்து உள்ளார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி