மொகரம் அரசு விடுமுறை அக்டோபர் 24-ம் தேதி மாற்றம் - வெள்ளி கிழமை வேலைநாள்

மொகரம் அரசு விடுமுறை அக்டோபர் 24-ம் தேதிக்கு (சனி கிழமைக்கு) மாற்றம் - வெள்ளி கிழமை வேலைநாள்...!


அக்டோபர் 23-ம் தேதியை மொகரம் விடுமுறை தினமாக தமிழக அரசு அறிவித்திருந்தது. மொகரம் மாதத்தின் முதல் நாளில் பிறைதெரிந்தால் 10-வது நாளில் மொகரம் திருநாள் கடைப்பிடிக்கப்படும். ஆனால்,இந்த ஆண்டு முதல் நாளான அக்டோபர் 13-ம் தேதி பிறை சரியாகத் தெரியவில்லை. மறுநாள் தெரிந்தது.

இதனால், 10-ம் நாளான அக்டோபர் 24-ம் தேதியை மொகரம் விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தலைமை காஜி வேண்டுகோள் விடுத்தார்.இதனை பரிசீலனை செய்த தமிழக அரசு, அக்டோபர் 23-ம்தேதிக்குப் பதிலாக 24-ம் தேதியை மொகரம் பொது விடுமுறையாக அறிவித்து அரசாணை பிறப்பித்துள்ளது.

G.O.Ms.No.1197 Dt: October 19, 2015 Public Holiday for Muharram declared on 24.10.2015 under Negotiable Instruments Acts 1881 - Orders - Click Here...

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி