ஆதார் அட்டையில் 'செல்போன்'எண்ணை மாற்றும் வசதி அரசு 'இசேவை'மையங்களில் அறிமுகம்சென்னை : தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முதல்அமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவின்பேரில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தலைமைச் செயலகம், 264 வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம், சென்னை மாநகராட்சியின் 15 மண்டல அலுவலகங்கள், 54 கோட்ட அலுவலகங்கள் மற்றும் சென்னை, மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள் என மொத்தம் 337 இடங்களில் அரசு இசேவை மையங்களை அமைத்து நிர்வகித்து வருகிறது. 

இச்சேவை மையங்கள் மூலமாக தமிழக அரசின் வருவாய்த் துறை மற்றும் சமூகநலத்துறை சார்ந்த 13,28,647 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு சம்மந்தப்பட்ட துறைகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதுமட்டுமின்றி இச்சேவை மையங்கள் மூலமாக 4,36,352 நபர்களுக்கு பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. 
தற்போது இந்த 337 சேவை மையங்களிலும் ஆதார் அட்டையினை பதிவு செய்யும்போது வழங்கப்பட்ட செல்போன் எண் மற்றும் 'இமெயில்'முகவரி ஆகியவற்றை மாற்றம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

'செல்போன்'எண் மற்றும் 'இமெயில்'முகவரியினை மாற்றம் செய்ய விரும்புவோர் இச்சேவை மையங்களை அணுகி தங்களது புதிய 'செல்போன்'எண் மற்றும் 'இமெயில்'முகவரி ஆகியவற்றை ரூ.10 செலுத்தி மாற்றம் செய்துக்கொள்ளலாம். எனவே பொதுமக்கள் இந்தப் புதிய சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி