ஆன்ட்ராய்ட், ஆப்பிள் போன்களில் தமிழ் டைப் செய்ய மென்பொருள்

ஆண்ட்ராய்ட், ஆப்பிள் போன்ற ஸ்மார்ட் போன்களில் தமிழ் டைப் செய்ய பயன்படும் ஒரு அருமையான மென்பொருள் - செயலி முரசு செல்லினம். 

tamil typing app murasu sellinam for android

முரசு செல்லினம் மென்பொருள் (செயலி) : 


ஸ்மார்ட்போன்களில் தமிழில் டைப் செய்ய பயன்படும் ஒரு செயலி ஆகும். மலேசியாவைச் சேர்ந்த திரு. முத்து நெடுமாறன் என்பவர் இதை உருவாக்கினார். முழுவதும் இலவசமாக கிடைக்கும் இச்செயலி பயனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இதைப் பயன்படுத்திய பயனர்களின் அனுபவங்கள் மற்றும் கருத்துகளை பரிசீலித்து அதற்கேற்ற வகையில் அதை மேம்படுத்தி புதிய பதிப்பாக செல்லினம்2 வெளியிடப்பட்டுள்ளது.

செல்லினம் மென்பொருள் - சிறப்புகள்: 


1. சொல் திருத்தி: 

மென்பொருளின் மிக முக்கியமான சிறப்பாக சொல்திருத்தி (Automatic word Editor) வசதியை கூறலாம். இந்த செல்லினம் தமிழ் எழுதியில், மற்ற தமிழ் டைப் செய்யும் மென்பொருள்களில் ஏற்படுவது போன்று சொற்பிழைகள் ஏற்படுவதில்லை. இதில் தவறாக எழுத்துப் பிழையுடன் தட்டசிட்டாலும், அந்த வார்த்தையை "சொல் திருத்தி" வசதியின் மூலம் தானாகவே திருத்தி அமைத்து விடும். 

2. எண்களை உள்ளிடுதலில் புதிய வழி: 

சாதாரணமாக மொபைல் போனில் உள்ள கீபோர்டில் எண்களை உள்ளிட 123 என்ற விசையைகளைத் தட்டி, பிறகு கிடைக்கும் குறியீடுகள் மற்றும் எண்களுக்கான குறியீடுகளை போர்டில் தேர்ந்தெடுத்து உள்ளீடு செய்யும் வழிமுறையே உள்ளது. 

ஆனால் புதிய செல்லினம் பதிப்பில் அவ்வாறில்லை. முதல் வரிசையில் உள்ள விசைகளை தொடர்ந்து அழுத்தினாலே எண்களை உள்ளிடும் வசதி தோன்றும்.

tamil type app for android


3. Predictive Text:

ஆங்கிலத்தில் ஒரு சொல்லை தட்டச்சிடும்பொழுது, தானாகவே இந்த சொல்தானா என்பதை காட்டும் வசதிகள் உண்டு. அதுபோல செல்லினம் மென்பொருளில் தானியங்கி வார்த்தை வசதிகள் உண்டு. நீங்கள் தட்டச்சிடும் முதன் மூன்று எழுத்துக்களை உணர்ந்துகொண்டு அந்த எழுத்துக்களில் தொடங்கும் வார்த்தைகளை வரிசைப்படுத்தி காட்டும். 

செல்லினம் மென்பொருள் மூலம் தட்டச்சிடும்பொழுது தோன்றுகிற கீழ்நோக்கிய அம்புக்குறி (Lower aero Mark) -ஐ அழுத்தினால் அந்த எழுத்துகளில் தொடங்கும் சொற்பட்டியல் விரித்துக் காட்டப்படும். தேவையான வார்த்தையை அதிலிருந்து தேர்ந்தெடுக்கலாம். 

செல்லினம் மென்பொருளில் உள்ள கூடுதல் வசதிகள்: 

சொல் திருத்தியுடன் கூடிய முதல் தமிழ் மென்பொருள் இதுவாகும். இம்மென்பொருளை பிரபல செல்பேசி தயாரிப்பு நிறுவனங்களான HTC, APPLE தங்களுடைய ஸ்மார்ட்போன் சாதனங்களில், ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இணைத்து வழங்குகின்றன. 

வெளியான சில மாதங்களிலேயே செல்லினம் மென்பொருள் பயனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. அதை உணர்ந்து மற்ற ஸ்மார்ட் போன் தயாரிப்பாளர்களும் இதனை தங்களுடைய தயாரிப்புகளில் இணைத்து வெளியிட திட்டமிட்டுள்ளனர். 

ஒரு லட்சத்திற்கும் மேலானோர்கள் செல்லினம் தமிழ் எழுதி செயலியை தரவிறக்கம் - டவுன்லோட் - செய்து பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

செல்லினம் மென்பொருளைத் தரவிறக்கம் செய்ய : Download Free Tamil input Software Sellinam 2


ஆங்கிலத்தில் செல்லினம் மென்பொருள் பற்றிய குறிப்புகள்: 

  • Sellinam enables Tamil text input on mobile devices. 
  • It was first developed in the year 2003 and subsequently launched for public usage in 2005 on Pongal day.
  • Sellinam for Android is a complete input method suite that has specific keyboards for Tamil, English, Phone Number and URL entries. 
  • You may choose between Murasu Anjal and Tamil99 keyboard layouts for Tamil text input.
  • Sellinam also includes a dictionary that offers suggestions based on the first few letters that you type. 
  • This tremendously helps you compose your messages quickly and easily while minimising embarrassing spelling errors.
  • As this is a system wide input method, you may use Sellinam to send SMS messages, Whatsapp, Viber, Skype, Tweet, Facebook and all the fun things you do on your phone - directly in Tamil. 
  • There is no need to cut-and-paste!
  • Enjoy Sellinam and please spread the word around if you like this app.

Features of Sellinam Version 2.0

This is a major new version of Sellinam for Android. Some key features include:

1. World-level auto-correction
2. Extended suggestions list
3. Long-press for alternate keys
4. UI changes
5. Various bug fixes for stability
6. Support for Android 4.3

For More Details visit : http://sellinam.com

Tags: download free tamil software, Sellinam android apps, tamil android apps, tamil input tool for apple device, tamil software, tamil typing software, tamil typing apps, tamil typing software for smartphone, 

Source : http://thangampalani.blogspot.in/

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி