தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வரலாறு ?


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission- TNPSC) என்பது தமிழக அரசுப் பணிக்குத் தேவையானவர்களை தகுந்த போட்டித் தேர்வுகள் வாயிலாகத் தேர்வு செய்ய ஏற்படுத்தப்பெற்ற ஒரு அரசு சார்ந்த அமைப்பு ஆகும். இது இந்தியாவில் மாநில அளவில் உருவாக்கப்பெற்ற முதல் தேர்வாணையமாகும். 1929இல் சென்னை மாகாண சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பெற்ற ஒரு சட்டத்தின் மூலம் ஒரு தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்களை கொண்டு உருவாக்கப்பெற்றது. அப்பொழுது இதன் பெயர் The Madras Service Commission. மாநில மறுசீரமைப்புக்குப் பின் 1957இல் இது மதராசு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Madras Public Service Commission) என்று பெயர் மாற்றம் செய்யப்பெற்று, சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படத் தொடங்கியது. சென்னை மாநிலம் என்பது தமிழ்நாடு என மாற்றம் பெற்ற பிறகு இதுவும் தானாகவே ”தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்” என்று மாறிவிட்டது.


அமைப்பு

தமிழக அரசால் ஏற்படுத்தப் பெற்ற இத் தேர்வாணையம் ஒரு தலைவர், மற்றும் குறிப்பிட்ட அளவிலான உறுப்பினர்களைக் கொண்டு செயல்படுகிறது. இவர்களின் பணிவிதிகள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒழுங்குமுறை சட்டம்,1954 கீழ் வரையறுக்கப்பட்டுள்ளன.

பணிகள்

தேர்வாணையம் ஆற்ற வேண்டிய பணிகள் என்ன என்பதன் விவரங்கள் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 320-இல் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய அளவில் ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் செயல்படுவது போல் தமிழக அளவில் இது செயல்படுகிறது. அரசு அலுவலகங்களில் உதவியாளர் முதல் வருவாய்க் கோட்டாட்சியர், வட்டாட்சியர், நகராட்சி ஆணையாளர், துணைக் காவல் கண்காணிப்பாளர், துணை ஆட்சியர் அல்லது இது போன்ற முதன்மைப் பணிகளுக்குத் தேவையனவர்களைத் தகுந்த போட்டித் தேர்வுகள் நடத்தி தேர்வு செய்யும் பணிகளை செய்கிறது.

தலைவர்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பதவிக்கு சி.பாலசுப்ரமணியன்(பொறுப்பு) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 62 வயது நிறைவுறும் வரை இப்பதவியில் இருக்கலாம்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி